வாழப்பாடி அடுத்த பெலாப்பாடி மலை கிராமத்தில் புதிய கற்காலக் கருவிகள்: சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்தனர்: வாழப்பாடி, நவ.04:- சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெலாப்பாடி மலை கிராமத்தில் பழமையான கோவில் வளாகத்தில் நுாற்றுக்கும் அதிகமான, 6,000 ஆயிரம் பழைமையான புதிய கற்கால கருவிகளை வைத்து பாதுகாத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருவதை சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலை மற்றும் கல்வராயன் மலை கிராமங்கள், 6,000 ஆண்டுகளுக்கு முன்னரே பழங்கால மக்களின் வாழிடமாக இருந்ததை அப்பகுதியில் கிடைத்து வரும் புதிய கற்கால கருவிகள் மற்றும் கல்வெட்டுகள், நடுகற்கள் ஆகியவை உறுதிப்படுத்தி வருகின்றன. ஏற்கனவே, கல்வராயன்மலை சேம்பூர், அத்திரிப்பட்டி, கிராங்காடு, குன்னுார் மற்றும் அருநுாற்றுமலை பள்ளிக்காடு, சிறுமலை உள்ளிட்ட கிராமத்தில் புதிய கற்கால கருவிகளும், இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்படும் ஈமச்சின்னங்களான கற்திட்டைகள் மற்றும் கற்குவைகளும் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினரால் கண்டறியப்பட்டது. சேலம் வரலாற்று ஆ...
கருத்துகள்
கருத்துரையிடுக