முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம் கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்.தலைவர் சேலம் வரலாற்று ஆய்வு மையம் ஆறகழூர் பெருமாள் கோயிலில் அழிந்து போன சிவன் கோயிலின் கல்வெட்டு கண்டுபிடிப்பு   சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள கரி வரதராஜபெருமாள் கோயிலில் பாண்டியர் மற்றும் நாயக்கர் கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.  சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆய்வுமையத்தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கமலமங்கை நாச்சியார் கோயிலில் பாண்டியர் மற்றும் நாயக்கர் கால கல்வெட்டுகளை கண்டறிந்தனர். கமலமங்கை நாச்சியார் சன்னதி மகதைமண்டலம் 12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூர் மகதை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது.பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னர் மகதை நாட்டை ஆண்டு வந்தார். இவர் சோழமன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தளபதியாகவும், மகதையின் குறுநில மன்னராகவும் விளங்கினார்.இவர் காலத்தில்தான் ஆறகழூர் காமந