முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சேலம் வரலாற்று ஆய்வுமைய கருத்தரங்கம்

                  சேலம் வரலாற்று ஆய்வுமைய கருத்தரங்கம்  மே 14 ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது நன்றி..நன்றி..நன்றி. . சேலம் வரலாற்று ஆய்வு மைய கருத்தரங்குக்கு வந்து சிறப்பித்த ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. 5 மாதங்களுக்கு முன் நடந்த பேளூர் மரபுநடையின் போது அடுத்து ஒரு கருத்தரங்கை நடத்த வேண்டும் என முடிவு செய்து அதை வாழப்பாடியில் நடத்தலாம் என ஆய்வு மையம் முடிவு செய்தது. கடந்த 2 மாதங்களாய் அதற்கான முயற்சியில் ஈடுபட்டோம். Ponnambalam Chidambaram ,  Kalai Selvan ,  Kaliyappan Srinivasan ,  Perumal Madhu Navin ,  Periyar Mannan ,  Jeevanarayanan Selvakumar ,  Veeramani Veeraswami ,  தீபக் ஆதீ ,  Chennai Sevas Pandian ஆகிய நிர்வாகிகள் கருத்தரங்கை சிறப்பாய் நடத்த முயற்சிகள் மேற்கொண்டனர் ஆய்வாளர்கள் திரு பூங்குன்றன் அய்யா, திரு. வீரராகவன் அய்யா, திரு குழந்தைவேலன் அய்யா, திருமதி  Mangai Ragavan மேடம், திரு  Manonmani Pudhuezuthu  சார், திரு  Rajaram Komagan  சார், திரு  Mahathma Selvapandiyan  சார் ஆகியோருக்கு மிக

சேலம் மாவட்ட குறுநில மன்னர்கள் -3

          சேலம் மாவட்ட குறுநில மன்னர்கள் சேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள் - 3 கெட்டி முதலிகள் கெட்டி வம்ச அரசர்களின் தலைநகர் அமரகுந்தி. ஆட்சிகாலம் கி.பி.1539 முதல் 1689 வரை 150 ஆண்டுகள் ஆகும். மதுரை நாயக்கர்களின் கீழ் இவர்கள் ஆட்சி இருந்தது. சங்க காலம் முதலாகவே இந்த கெ(க)ட்டிகள் இருந்தார்கள் என தெரிகிறது. வணங்காமுடி முதலியார், இம்முடி கட்டி, சீயாலக்கட்டி,இம்முடிகட்டி 2, வணங்காமுடி கொமாரக்கட்டி ஆகியோர் முக்கியமானவர்கள். தாரமங்கலம் இவர்களின் தலமையிடமாக இருந்துள்ளது.ஹெய்சாளர்கள் ,பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் இப்பகுதியில் ஊர் தலைவர்களாக இருந்தவர்கள் இந்த கெட்டி முதலிகள் என வரலாற்று ஆய்வாள்கள் கருதுகின்றனர். மதுரை நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்கள் என்றழைக்கப்படு தாரமங்கலத்தை தலமையிடமாக கொண்டு கட்டிமுதலி என்ற பட்டத்துடன் ஆட்சி செய்துள்ளனர். இவர்களின் ஆட்சி பகுதி தாரமங்கலம், ஓமலூர், பவானி,ஆத்தூர், ஆறகழூர் போன்ற பகுதிகள் இருந்துள்ளன. இவர்களின் கல்வெட்டுக்கள் ஆறகழூர்,ஓமலூர், தாரமங்கலம், பவானி போன்ற இடங்களில் காணப்படுகின்றன. ஆறகழூர் வெங்கடேசன் பொன்

சேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள் 2

      சேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள்   2 சேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள் வரும் மே 14 ஞாயிற்றுகிழமை சேலம் மாவட்டம் வாழப்பாடியில்  # சேலம்  மாவட்ட குறுநிலமன்னர்கள் என்ற தலைப்பில் திரு ஆய்வாளர் அய்யா பூங்குன்றன்(துறை தலைவர் ஓய்வு) அவர்கள் பேச உள்ளார்..அனைவரும் வந்து கலந்து கொண்டு பயனுற வேண்டுகிறோம். சேலம் மாவட்டத்தில் 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இராமாவடிகள் என்ற மன்னர் ஆத்தூர் பகுதிகளை ஆட்சி செய்ததை பார்த்தோம். இந்த பதிவில் 12 ஆம் நூற்றாண்ட சேர்ந்த குறு நில மன்னரை பார்ப்போம். 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகள், பெரம்பலூர் மாவட்டத்தின் வடக்கு, விழுப்பும் மாவட்டத்தின் மேற்க்கு ,திருவண்ணாமலை மாவட்டத்தின் தெற்க்கு பகுதிகள், கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகள் சேர்ந்தது மகதை நாடாகும். இந்த மகதை நாட்டை வாணகோவரையர்கள் ஆண்டு வந்தனர். இவர்களின் தலை நகரம் ஆறகளூர். இந்த வாணகோவரையர்களில் புகழ் பெற்றவர் பொன்பரப்பின வாண கோவரையன் .இவரின் கல்வெட்டுக்கள் ஆறகழூர், பெரம்பலூர், விழுப்புரம்,கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ளது. திருவண்ணாமலையில் இவரின் பாடல்கள் கல்வெட்

சேலம் மாவட்ட குறுநில மன்னர்கள்

சேலம் மாவட்ட குறுநில மன்னர்கள் வரும் 2017 மே 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாழப்பாடியில் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் வரலாற்று கருத்தரங்கம் நடைபெற உள்ளது, இதில் ஆய்வாளர்கள் பல்வேறு தலையில் பேச உள்ளனர். இதில் சேலம் மாவட்டத்தில் குறு நில மன்னர்கள் என்ற தலைப்பில் தொல்லியல் துறையில் பணியாற்றி ஒய்வு பெற்ற ஆய்வாளர் பூங்குன்றன் அய்யா அவர்கள் பேச உள்ளார்..அய்யாவின் கருத்துக்களை குறிப்பெடுக்க பேனா நோட்டு அவசியம் கொண்டு வாங்க... குறுநில மன்னர்கள் பற்றி நடுகல் கல்வெட்டுக்களும், கோயில் கல்வெட்டுக்களும் நமக் கு தெரிவிக்கின்றன...சேலம் மாவட்டத்தில் 9 ஆம் நூற்றாண்டு முதலே குறு நில மன்னர்கள் பற்றி தகவல்கள் கிடைக்கின்றன. நம் சேலம் வரலாற்று ஆய்வுமையம் கண்டறிந்த நீர்முள்ளிகுட்டை நடுகல்லானது ராமாவடிகள் என்ற ஒரு குறுநில மன்னரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த ராமாவடிகள் என்ற மன்னர் தமிழகம்ம் இது வரை அறியாத ஒரு புதிய பெயராகும்.இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை ஆட்சி செய்துள்ளார். 9 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு இது. ஆட்சியாண்டு ஏதும் குறிப்பிடப்படா

சேலம் வரலாற்று ஆய்வு மைய வரலாற்று கருத்தரங்கம்

சேலம் வரலாற்று ஆய்வு மையம் வழங்கும் வரலாற்று கருத்தரங்கம் அன்புடையீர் அனைவருக்கும் வணக்கம் சேலம் வரலாற்று ஆய்வு மையமானது கடந்த 2 ஆண்டுகளாக வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பாய் சேலம் மாவட்டத்தில் களப்பணியில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை பல கல்வெட்டுக்கள், நடுகற்களை கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளோம். வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைத்து தாரமங்கலம், சங்ககிரி, ஆத்தூர், பேளூர் போன்ற இடங்களில் மரபுநடை நடத்தி உள்ளோம். இதன் அடுத்த கட்ட நகர்வாக கருத்தரங்கு ஒன்றை நடத்த நம் வரலாற்று ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. இதில் பல ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பல தலைப்புகளில் பேச உள்ளனர். நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்... சேலம் வரலாற்று ஆய்வு மையம்- வரலாற்று கருத்தரங்கம் நாள் ஞாயிற்று கிழமை 14/05/2017 இடம் : அரிமா அரங்கம் காளியம்மன் கோயில் அருகே,வாழப்பாடி நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கலந்து கொள்ள உள்ள ஆய்வாளர்களும் பேசும் தலைப்பும் 1. திரு .இரா. பூங்குன்றன் அவர்கள் , தலைமை அலுவலர் தொல்பொருள் ஆய்வுத்துறை (ஓய்வு) தலைப்பு : சேலம் மாவட்டத்தில் குறுநில மன்னர்கள்