முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சேலம் மாவட்ட குறுநில மன்னர்கள்


சேலம் மாவட்ட குறுநில மன்னர்கள்



வரும் 2017 மே 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாழப்பாடியில் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் வரலாற்று கருத்தரங்கம் நடைபெற உள்ளது, இதில் ஆய்வாளர்கள் பல்வேறு தலையில் பேச உள்ளனர். இதில் சேலம் மாவட்டத்தில் குறு நில மன்னர்கள் என்ற தலைப்பில் தொல்லியல் துறையில் பணியாற்றி ஒய்வு பெற்ற ஆய்வாளர் பூங்குன்றன் அய்யா அவர்கள் பேச உள்ளார்..அய்யாவின் கருத்துக்களை குறிப்பெடுக்க பேனா நோட்டு அவசியம் கொண்டு வாங்க...
குறுநில மன்னர்கள் பற்றி நடுகல் கல்வெட்டுக்களும், கோயில் கல்வெட்டுக்களும் நமக்கு தெரிவிக்கின்றன...சேலம் மாவட்டத்தில் 9 ஆம் நூற்றாண்டு முதலே குறு நில மன்னர்கள் பற்றி தகவல்கள் கிடைக்கின்றன.
நம் சேலம் வரலாற்று ஆய்வுமையம் கண்டறிந்த நீர்முள்ளிகுட்டை நடுகல்லானது ராமாவடிகள் என்ற ஒரு குறுநில மன்னரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
இந்த ராமாவடிகள் என்ற மன்னர் தமிழகம்ம் இது வரை அறியாத ஒரு புதிய பெயராகும்.இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை ஆட்சி செய்துள்ளார்.


9 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு இது. ஆட்சியாண்டு ஏதும் குறிப்பிடப்படாததால் பல்லவர் கீழ் இல்லாமல்
,ராமாவடிகள் சுதந்திரமாய் ஆட்சி செய்த மன்னர் என கருத வாய்ப்புண்டு.
இவரின் மகன் பெயர் பெருமான் ,இவர் பூலாம்பாடியின் மீது படயெடுத்த போது போரில் இறந்த பொன்ன குன்றி என்பவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இதுவாகும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் வரஞ்சரம் லகுலீசர்                                                           வரஞ்சரம் சிவன் கோயில் 10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம்.வீட்டுக்கு வந்த பின் தான் ஒவ்வொரு படமாக பார்த்தேன். ஒரு படத்தை பார்த்தபோது உடலுக்குள் திடீரென ஒரு உற்சாகம் தொற்றியது. இவர் அவராக

சேலம் வரலாற்று ஆய்வு மையம்-பேளூர் மூக்கறுப்பு கல்வெட்டு

மூக்கறுப்பு போர் நடந்ததிற்கான முதல் கல்வெட்டு ஆதாரம் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 2015 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூருக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு கல்வெட்டுக்கள் ஏதாவது கிடைக்குமா என தேடியபோது அங்காளம்மன் கோயில் முன்புள்ள பாக்குத்தோப்பில் ஓர் கல்வெட்டு இருப்பதாய் சொன்னார்கள். போய் பார்த்த போது அக்கல்வெட்டு பாதி பூமியில் புதைந்திருந்தது. அதை புகைப்படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். அதன் பின் சேலம் வரலாற்று தேடல் குழு என்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது         சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,   கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் அய்யா துணைத்தலைவர்   கலைச்செல்வன் ஆசிரியர், செயலாளர் மருத்துவர் பொன்னம்பலம், இணைச்செயலாளர் பெரியார்மன்னன், பொருளாளர் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் அடங்கிய குழு இக்கல்வெட்டை ஆய்வு செய்து மூக்கறுப்பு போர் நடந்ததற்கான  ஆதாரத்தை கண்டு பிடித்தது .இதைப்பற்றி சன்னல் இதழ் வெளியிட்ட கட்டுரை     கல்வெட்டின் மேல் சிவல

வீரகனூர் புத்தர்

  வீரகனூர் புத்தர் - மகதை மண்டலம் புத்தரின் கையில் காணப்படும் இந்த முக்கோணம் போன்ற குறியீடு நமக்கு சிறப்பான புதிய செய்தி ஏதாவது ஒன்றை சொல்கிறதா ??    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரை தலைநகராக கொண்ட மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்த ஊர் வீரகனூர் அங்கு உள்ள புத்தர் சிலை இது இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்