முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

peryanesalur durgai -பெரியநெசலூர் கொற்றவை

விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர்பொன்.வெங்கடேசன் பெரியநெசலூர் கொற்றவை 1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட மலையமான் கால கொற்றவை கண்டுபிடிப்பு சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன்,ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,மருத்துவர் பொன்னம்பலம் ஆகியோர் அடங்கிய குழு கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரியநெசலூர் என்ற கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது ஆயிரத்திநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மலையமான் கால கொற்றவையும் சில கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. கொற்றவை     சங்ககாலத்தில் இருந்தே கொற்றவை வழிபாடு இருந்து வந்துள்ளது.அக்காலங்களில் தாய் வழி சமூக அமைப்பு செயல்பட்டதை கொற்றவை வழிபாட்டின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. சங்க இலக்கியங்களும்,தொல்காப்பியமும் கொற்றவையைப்பற்றி சில குறிப்புகளை தருகின்றன.சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரிகளில் கொற்றவையின் உருவ அமைப்பு,ஆயுதங்கள்,உடை,அணிகலன்கள்,வழிபாட்டு முறைகள் போன்றவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது. கொற்றவை பாலை நிலக்கடவுளாக அறியப்படுகிறார்.காடுகளில் வசித்த வேட்டுவர்கள் தங்களது வேட்டையில் வெற்றி கிடைக்க கொற்றவையை வழிபட்ட