முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் வரஞ்சரம் லகுலீசர்                                                           வரஞ்சரம் சிவன் கோயில் 10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம்.வீட்டுக்கு வந்த பின் தான் ஒவ்வொரு படமாக பார்த்தேன். ஒரு படத்தை பார்த்தபோது உடலுக்குள் திடீரென ஒரு உற்சாகம் தொற்றியது. இவர் அவராக

pottaneri பொட்டனேரி வட்டெழுத்து கல்வெட்டு

பொட்டனேரி வட்டெழுத்து கல்வெட்டு பொட்டனேரி வட்டெழுத்து கல்வெட்டு ஆறகழூர்பொன்.வெங்கடேசன், வீரராகவன் பொட்டனேரி வட்டெழுத்து கல்வெட்டு தமிழ் மொழியானது துவக்கத்தில் மனிதன் காடுகளில் வாழ்ந்த போது ஒலியில் துவங்கி பின் குறியீடுகள்,சித்திரங்கள்,பாறை ஓவியங்கள் என தொடர்ந்து தமிழி,வட்டெழுத்து,என வளர்ந்து இன்று நாம் கானும் வடிவில் செம்மையடைந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்த மக்கள் தங்கள் உணர்வுகளை செய்திகளை பதிவு செய்து வைத்துள்ளனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் பொட்டனேரி என்ற கிராமத்தில் ஒரு வட்டெழுத்து கல்வெட்டு கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த செய்தி தினமணி,தினத்தந்தி நாளிதழ்களிலும், தினமணி,தினத்தந்தி,விகடன்,நக்கீரன்,சத்யம் ,பி.பி.சி,nntv web ஆகிய இணையதளங்களிலும் வெளியாகியுள்ளது. செய்தியை வெளியிட்ட நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு தினமணி சரவணன்,தினத்தந்தி திரு வேலுமணி,விகடன் வெற்றி, நக்கீரன் பகத்சிங் ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.                    1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்து கல்வெ