முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆறகழூர் ஜினாலயகல்வெட்டு2

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் கி.பி.2015 ஆம் ஆண்டு இந்த ஜிநாலய கல்வெட்டை கண்டுபிடித்தேன்.அப்போது கல்வெட்டின் பாதி பகுதி மண்ணுக்குள் இருந்தது. ஊர் மக்கள் உதவியுடன் அகழ்ந்து பார்த்த போது 8 வரியில் கல்வெட்டு இருந்தது. தொல்லியல் ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் அய்யா மூலம் கல்வெட்டு படிக்கப்பட்டது. ஆறகழூரில் பொன்பரப்பின பெருமாள் நாற்பத்தெண்ணாயிரம் என்ற சமண ஸ்ரீ கோயிலும் நாற்பத்தெண்ணாயிர பெரும்பள்ளியும் ஆறகழூரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன்

ஆறகழூர் ஜினாலயகல்வெட்டு 1

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் கி.பி.2015 ஆம் ஆண்டு இந்த ஜிநாலய கல்வெட்டை கண்டுபிடித்தேன்.அப்போது கல்வெட்டின் பாதி பகுதி மண்ணுக்குள் இருந்தது. ஊர் மக்கள் உதவியுடன் அகழ்ந்து பார்த்த போது 8 வரியில் கல்வெட்டு இருந்தது. தொல்லியல் ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் அய்யா மூலம் கல்வெட்டு படிக்கப்பட்டது. ஆறகழூரில் பொன்பரப்பின பெருமாள் நாற்பத்தெண்ணாயிரம் என்ற சமண ஸ்ரீ கோயிலும் நாற்பத்தெண்ணாயிர பெரும்பள்ளியும் ஆறகழூரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன்

வணிககுழு கரண்டி aragalur ஆறகழூர்

சேலம்  மாவட்டம், ஆத்தூர் அருகே, ஆறகளூரில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த வணிக கல்வெட்டு மற்றும் வணிகக் குழு கரண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் வரலாற்று ஆய்வுமைய தலைவரும், தொல்லியல் ஆய்வாளருமான வெங்கடேசன், ஆறகளூரில் ஆய்வு மேற்கொண்டார். வணிகக்குழு கரண்டி: காமநாதீஸ்வரர் கோவிலையொட்டி உள்ள தேசாதி பட்டணம் செட்டியார் என்ற குடும்பத்தினர் வசித்து வருவதும், இவர்களது மடத்தில், 15ம் நூற்றாண்டின் சங்கிலியால் இணைக்கப்பட்ட வணிகக் குழு கரண்டி கண்டறியப்பட்டது. இக்குடும்பத்தினர் வழக்குகளை விசாரிக்கும்போது, இந்த கரண்டியை ஒரு மேடையில் வைத்து, தீர்ப்பு சொல்லும் வழக்கம் இருந்ததால், இன்றளவும் புனிதமானதாக கருதுகின்றனர். இந்த கரண்டியின் முனையில் வட்ட வடிவமான குழியும், பெரிய அளவில் சூரியன், சிவலிங்கம், சிறிய அளவில் விநாயகர் உருவம் உள்ளது. இரண்டு கரங்களிலும் அமிர்த கலசம் இருக்கிறது. கைப்பிடி பகுதியில் ஒன்பது பகுதிகளாக பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் எடை கல், தச்சரின் கருவி, இரும்பு வேலைக்கான கருவிகள் உள்ளிட்ட வணிக குழு சின்னங்கள் உள்ளன. கடல் வணிகம், எண்ணெய் வணிகம், இசை கருவிகள், தராசு போன்றவை காட்டப்பட்டுள்ளன. மு

பெரியேரி எலிகல்வெட்டு

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூருக்கு அருகே உள்ள பெரியேரி என்ற கிராமத்தில் தமிழகத்திலே எலி உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. பாண்டியர்களின் கீழ் ஆறகழூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த வாணகோவரையர்களால் இக்கல்வெட்டு வெட்டப்பட்டிருக்கலாம். வசந்த் தொலைகாட்சியில் நான் பேசியபோது ஆறகழூர் பொன்.வெங்கடேசன்

தியானமண்டப புத்தர்

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூருக்கு அருகே உள்ள தியான மண்டபத்தில் உள்ள புத்தர் .பல நூற்றாண்டுகளாய் வயல்வெளியில் இருந்த இந்த புத்தருக்கு சில ஆண்டுகளுக்கு முன் அப்போதைய மாவட்ட ஆட்சியர் மகரபூசணம் அவர்கள் முயற்சியின் விளைவாக கொடையாளர்கள் மூலம் தியான மண்டபம் கட்டப்பட்டது

தியாகனூர் புத்தர் கோயில்

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூருக்கு அருகே உள்ள தியாகனூரில் உள்ள தமிழகத்தின் மிகப்பெரிய புத்தர் சிற்பம் பற்றி நான் வசந்த் தொலைக்காட்சியில் மண்பேசும் சரித்திரம் நிகழ்சியில் பேசியபோது

தன்மதாவள கல்வெட்டு

சேலம் வரலாற்று ஆய்வுமைய தலைவரும், தொல்லியல் ஆய்வாளருமான வெங்கடேசன், ஆறகளூரில் ஆய்வு மேற்கொண்டார். கோட்டைக்கரை என்ற இடத்துக்கு அருகே, ராமன் என் பவரின் விளைநிலத்தின் வரப்பின் மீது, ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. இவை, 13ம் நூற்றாண்டு கல்வெட்டு என தெரியவந்தது. இதுகுறித்து, அவர் கூறியதாவது: இந்த கல்வெட்டில் மொத்தம், 16 வரிகள் உள்ளன. 'ஸ்வஸ்திஸ்ரீ களப்பாளராயனும் புரவாரியாருக்கு' என, கல்வெட்டு துவங்குகிறது. களப்பாளராயர் என்பவர் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன், நிலங்களை நிர்வகிக்கும் முக்கிய அதிகாரியாக இருந்தார். இவரது உத்தரவுப்படி, கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. புரவாரியார் என்பவர் வரிக்கணக்கை சரி பார்க்கும் அலுவலர் ஆவார். களப்பாளராயரின் ஆணையை புரவாரியார் நிறைவேற்றி உள்ளார். ஆறகளூரில் வாழ்ந்த வணிகர்கள், அரசுக்கு செலுத்த வேண்டியை வரியை செலுத்த தேவையில்லை எனவும், அந்தப்பணத்தை, 'உலகம் காத்த சோளீசுரமுடைய நாயனார்' கோவிலுக்கு ஒன்பதாவது தை மாதம் முதல் பூஜை, திருப்பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்று, கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்த கல்வெட்டின் கடைசியில், 'தன்ம தாவளம்' என்ற சொல்,

வீரகனூர் புத்தர்

  வீரகனூர் புத்தர் - மகதை மண்டலம் புத்தரின் கையில் காணப்படும் இந்த முக்கோணம் போன்ற குறியீடு நமக்கு சிறப்பான புதிய செய்தி ஏதாவது ஒன்றை சொல்கிறதா ??    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரை தலைநகராக கொண்ட மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்த ஊர் வீரகனூர் அங்கு உள்ள புத்தர் சிலை இது இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்

aragalur- ஆறகழூர் கல்வெட்டுக்கள் வணிககல்வெட்டு

     ஆறகழூர் வணிக கல்வெட்டு , வணிக குழு கரண்டி  நான் கண்டுபிடித்த இந்த செய்தி காலைக்கதிர், தினமணி,தினமலர், மாலைமலர், ஆகிய நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்குவைகள் ஏற்காட்டில் கண்டுபிடிப்பு ஏற்காட்டை சுற்றி உள்ள மலைக்கிராமங்களில் 20 க்கும் மேற்பட்ட கற்குவைகளும் ,கற்திட்டைகளும், புதிய கற்கால கருவிகளும், நடுகல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.       சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், கலைச்செல்வன் ஆசிரியர், பெருமாள் ஆசிரியர், சுகவன முருகன் ஆசிரியர், மருத்துவர் பொன்னம்பலம், சீனிவாசன், ஜீவநாரயணன், பெரியார் மன்னன் ஆகியோர் அடங்கிய குழு ஏற்காட்டை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் ஆய்வினை மேற்கொண்டது. அப்போது மோட்டூர், தங்கமலை, நல்லூர், மேலூர், வெள்ளக்கடை, செம்மநத்தம், போன்ற கிராமங்களில் கற்குவை, கல்திட்டை, புதிய கற்காலகருவிகள்,குத்துக்கல், நடுகல்  போன்றவற்றை கண்டறிந்தனர். ஈமச்சின்னங்கள்:                வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் கூட்டத்தில் முக்கியமானவர்

aragalur-ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் புகழ்பெற்ற 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த காமநாதீசுவரர் கோயிலில் உள் பிரகாரத்தில் கீழே பதிக்கப்பட்ட கல்வெட்டு கல்வெட்டு வாசகம்     கேரலைகணக்கு அபய நயினார் மகன் கன்னயன் சதாசேர்வை

சேலம் வரலாற்று ஆய்வு மையம்-பேளூர் மூக்கறுப்பு கல்வெட்டு

மூக்கறுப்பு போர் நடந்ததிற்கான முதல் கல்வெட்டு ஆதாரம் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 2015 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூருக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு கல்வெட்டுக்கள் ஏதாவது கிடைக்குமா என தேடியபோது அங்காளம்மன் கோயில் முன்புள்ள பாக்குத்தோப்பில் ஓர் கல்வெட்டு இருப்பதாய் சொன்னார்கள். போய் பார்த்த போது அக்கல்வெட்டு பாதி பூமியில் புதைந்திருந்தது. அதை புகைப்படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். அதன் பின் சேலம் வரலாற்று தேடல் குழு என்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது         சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,   கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் அய்யா துணைத்தலைவர்   கலைச்செல்வன் ஆசிரியர், செயலாளர் மருத்துவர் பொன்னம்பலம், இணைச்செயலாளர் பெரியார்மன்னன், பொருளாளர் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் அடங்கிய குழு இக்கல்வெட்டை ஆய்வு செய்து மூக்கறுப்பு போர் நடந்ததற்கான  ஆதாரத்தை கண்டு பிடித்தது .இதைப்பற்றி சன்னல் இதழ் வெளியிட்ட கட்டுரை     கல்வெட்டின் மேல் சிவல