முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சேலம் வாழப்பாடி பெரியகுட்டி மடுவு நடுகற்கள்

பெரியகுட்டி மடுவு -11ஆம் நூற்றாண்டு சோழர்கால நடுகல் செய்தி. சுமார் 3 மாதங்களுக்கு முன் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பெருமாள் சார் புழுதிக்குட்டை பகுதிக்கு ஆய்வு செய்யலாம் என அழைத்தார். சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த விழுப்புரம் வீரராகவன் அய்யா,ஆறகழூர் பொன்.வெங்கடேசன், சுகவன முருகன் சார் பெருமாள் சார், கலைச்செல்வன் ஆசிரியர், மருத்துவர் பொன்னம்பலம்,சீனிவாசன், ஜீவநாராயணன், பெரியார் மன்னன், தீபக் ஆதி, வீரமணி வீராசாமி அய்யா ஆகியோர் அடங்கிய குழு புழுதிக்குட்டை பகுதியில் இரண்டு நடுகற்களை ஆய்வு செய்து படி எடுத்தோம்.. மேற்கொண்டு தேடலை தொடர கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் இங்கு நடுகல் இருக்கா, கல்வெட்டு இருக்கா என விசாரித்துக்கொண்டே மலை மேல் பைக்கில் ஏறுக்கொண்டே இருந்தோம். நீண்ட விசாரிப்பகளுக்கு பின் பெரிய குட்டி மடுவு என்ற இடத்தில் 2 கல்லு ரொம்ப நாளா நின்னுகிட்டு இருக்கு என தகவல் சொன்னார்..உற்சாகம் பீறிட அந்த இடத்தை நோக்கி எங்களின் பைக் சீறி பாய்ந்து சென்றது.. கிட்ட தட்ட அந்தி சாயும் நேரம் .சூரியன் மெல்ல மறைய துவங்கியிருந்தான் .இருட்டுவதற்க்குள் போகவேண்டுமே என பரபரப்புட

thiyakanur inscription - தியாகனூர் கல்வெட்டுக்கள்

தலைவாசல் அருகே 5 புதிய கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு தியாகனூர் கல்வெட்டுக்கள் தினமலர் செய்தி காலைக்கதிர் செய்தி தியாகனூர் கல்வெட்டு காலைக்கதிர் செய்தி தியாகனூர் கல்வெட்டு தினமலர் செய்தி சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்.மருத்துவர் பொன்னம்பலம்,கலைச்செல்வன்,பெருமாள்,சீனிவாசன்,ஜீவநாராயணன்,பெரியார் மன்னன் ஆகியோர் அடங்கிய குழு சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தியாகனூரில் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அங்குள்ள மலை மண்டல பெருமாள் கோயிலில் 5 புதிய கல்வெட்டுக்களை கண்டுபிடித்தனர். இவை 13 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தை சேர்ந்ததாகும் 13 ஆம் நூற்றாண்டில் ஆறகழூரின் ஒரு பகுதியாகவே தியாகனூர் இருந்துள்ளது. 15 ஆம் நூற்றாண்டுக்கு பின்னரே தியாகனூர் என பெயர் பெற்றது. இங்குள்ள கல்வெட்டுக்கள் இக்கோயிலை ஆறகழூர் மலைமண்டல பெருமாள் கோயில் என்றே குறிப்பிடுகின்றன. 12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூரை தலை நகராக கொண்டு வாணகோவரையர்கள் மகதை மண்டலத்தை ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் காலத்தில் செய்யப்பட்ட

சேலம் மாவட்ட கோட்டைகள்

                                  சேலம் மாவட்ட கோட்டைகள்     சேலம் மாவட்ட கோட்டைகள் வரலாற்றில் சேலம் மாவட்டம் எப்போதுமே முக்கிய பங்கு வகித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் பல கோட்டைகள் இருந்திருந்தாலும் இன்றைய நிலையில் சில கோட்டைகளே பார்க்க கூடிய நிலையில் உள்ளன அவை... 1. ஆத்தூர் கோட்டை 2. சங்ககிரி கோட்டை 3. நாமக்கல் கோட்டை(பழைய சேலம் மாவட்டம்) கால வெள்ளத்தில் காணாமல் போன கோட்டைகள் 4. ஓமலூர் கோட்டை 5. சேலம் கோட்டை 6. நங்கவல்லி கோட்டை 7. சேந்தமங்கலம் கோட்டை 8. பரமத்தி கோட்டை 9. பேளூர் கோட்டை 10. பெத்தநாயக்கன் பாளையம் கோட்டை 11. ஆறகழூர் கோட்டை 12. மேச்சேரிக்கோட்டை 13. அமரகுந்தி கோட்டை 14. தம்மம்பட்டி கோட்டை... ஆத்தூர் கோட்டை நாமக்கல் கோட்டை சங்ககிரி கோட்டை இது தவிர சேலம் மாவட்டத்தில் உங்களுக்கு தெரிஞ்ச கோட்டை இருந்தா சொல்லுங்க நண்பர்களே...