முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுகள் எண் 7 காமக்காபாளையம் நானும் வீரராகவன் ஐயாவும் நண்பர்களுடன் கன்னட கல்வெட்டு காமக்காபாளையம் கன்னட கல்வெட்டை பார்த்தபோதே அங்கிருந்த அருணாசலேசுவரர் கோயிலின் சுவற்றில் இருந்த இந்த கல்வெட்டையும் வீரராகவன் ஐயாவும் நானும் படி எடுத்து படித்தோம். பணி சுமையின் காரணமாக கொஞ்ச நாள் முன்புதான் வெளியிட்டோம். காமக்காபாளையத்தை சேர்ந்த நண்பர்  Tvenkatesan Tvenkatesan  எங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்தார். விருதாசலம் கோயிலின் தாக்கத்தால் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கலாம் தலைவாசல் அருகே 527 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே காமக்காபாளையம் என்ற ஊரில் கி.பி. 1490 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் இருவரும் காமக்காபாளையத்தில் உள்ள அருணாசலேசுவரர் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது கோயிலின் அர்த்த மண்டபத்தில் விநாயகர் மாடத்துக்கு மேல் ஒன்பது வரிகளில் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. 98 செ.மீ நீளம்

ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுக்கள் எண் 6 காமக்காபாளையம் கன்னட கல்வெட்டு நானும் வீரராகவன் ஐயாவும் என் கல்வெட்டு தேடலில் இது ஒரு முக்கியமான கல்வெட்டு. இது வரை தமிழில் மட்டுமே கல்வெட்டுகளை பார்த்த நான் முதன் முதலில் கன்னட மொழியில் கண்டறிந்த கல்வெட்டு இது. நண்பர்கள் சென்ற பதிவில் குறிப்பிட்டதை போல் வேலி முள்ளுக்கு நடுவே தனித்தனியாக இரண்டு கற்கள் கல்வெட்டாய் கன்னட மொழியில் இருந்தது. இதை புகைப்படம் எடுக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். கிட்டவே நெருங்க முடியாத சூழலில் முள் சட்டையை கிழிக்க உடலிலும் கீறி இரத்தம் வர வர போட்டோ எடுத்தேன். ஒரு மாதம் கழித்து நானும் விழுப்புரம் வீரராகவன் அய்யாவும் படி எடுக்க சென்றோம். காமக்காபாளையத்தில் இருக்கும் என் நண்பரும் உறவினருமான  Tvenkatesan Tvenkatesan  அவர்கள் முள்ளை எல்லாம் ஆள் வைத்து வெட்டி சுத்தம் செய்து கொடுத்தார். கல்வெட்டு 2 துண்டாய் உடைந்து நட்டு வைக்கப்பட்டிருந்தது. அதை சுற்றி சப்போட்டுக்கு கற்கள் பதிக்கப்பட்டிருந்து. அன்று கொஞ்சம் கவனகுறைவாக இருந்திருந்தால் எங்க கதை முடிந்திருக்கும். ஒரு கல்லை புரட்டியபோது கல்லுக்குள் இருந்து 10க்கும் மேற்பட்ட பெரிய தேள

Aragalur ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுகள் எண் 5 2 வருடங்களுக்கு முன் ஒரு ஞாயிற்று கிழமை தொல்லியல் தேடலுக்கு கிளம்பினேன். ஆறகழூருக்கு பக்கத்தில் நத்தக்கரைன்னு ஒரு ஊர் அந்த ஊருக்கு போனேன். அந்த ஊருக்கு நத்தகரைன்னு எப்படி பேர் வந்துச்சு...? தெரிஞ்சிக்க அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் பேச்சு கொடுத்தேன்.. அய்யா இந்த ஊருக்கு நத்தகரைன்னு எப்படி பேர் வந்துச்சி..? நத்தக்கரை கல்வெட்டை ஆய்வு செய்யும்போது அதுவா..ரொம்ப வருசத்துக்கு முன்னாடி இங்க ராசாங்களுக்குள் பெரிய சண்டை நடந்திச்சி. அப்ப நெறைய பேரு இங்க போரில செத்து போய் ரெத்தம் ஆறா ஓடிச்சாம்.அதனால ரத்தகரைன்னு பேரு வந்துச்சாம். காலபோக்குல ரத்தகரை மருவி நத்தகரைன்னு ஆயிடுச்சி . இந்த சண்டையில கை,காலு போனவங்க, காயம் பட்டவங்களுக்கு மலைக்கு பக்கத்துல நிலம் கொடுத்து அங்கியே தங்க வச்சாங்க. அந்த ஊருதான் இப்ப இருக்குற புத்தூர்.என சொல்லி முடித்தார். இன்னொரு பெரியவரிடம் கேட்டேன். அவர் அந்த காலத்தில் இது ஆறகழூரின் ஒரு பகுதியாதான் இருந்துச்சி..ஆறகழூர் தலைநகராக இருந்திச்சி..கோட்டைக்குள்ள ராசா மந்திரி அப்புறம் முக்கியமான ஆளுங்க குடியிருப்பாங்க..சாதாரண ஆட்கள் குடியி

ஆறகழூர் கல்வெட்டுகள் பெரியேரி

பெரியேரி எலி கல்வெட்டு முன்புறம் பெரியேரி எலிகல்வெட்டு பின்புறம் மைப்படி எலி தமிழ் இந்து நாளிதழ் செய்தி ஆறகழூர் கல்வெட்டுகள் எண் 4 பெரியேரி எலிக்கல்வெட்டு அண்ணே இந்த மருந்தை கொடுங்க.. இந்த மாத்திரை 3 வேளைக்கு சாப்பிட்ட அப்புறம் கொடுங்க.. சீக்கிரம் நல்லாயிடுமா.. டாக்டர் செக் பண்ணிதானே எழுதியிருக்கார். சாப்பிடுங்க சரியாயிடும். அப்புறம் உகளுக்கு தெரிஞ்சி எங்கியாவது கல்வெட்டு இருக்கா..? கல்வெட்டா...? நம்ம பெரியேரி வண்ணான் குளம் பக்கத்துல ஒரு கல்லுல எழுதியிருக்கு வேணா போய் பாருங்க... அது எவ்வளவு முக்கியமான கல்வெட்டுன்னு அப்ப எனக்கு தெரியல. இது வரை நான் பார்த்த கல்வெட்டுலே பெரிய கல்வெட்டு அதுதான்.இது எதுவுமே தெரியாம பெரியேரி கிளம்பி போனேன். வண்ணான் குளம் அருகே தேடினேன். கல்வெட்டு கிடைக்கல..கொஞ்சம் உள்ள போய் தேடலாமான்னு யோசிட்டு உள்ள போனேன். நமக்கு தெரிந்தவர் காடுதான் அது அண்ணே இங்க கல்வெட்டு ஒண்ணு இருக்குன்னு சொன்னாங்களே அது எங்க இருக்கு.. அதுவா...பல தலை முறையா அது இங்கதான் இருக்குன்னு கூட்டிகிட்டு போனார். இந்த கல்லுக்கு அடியில் புதையல் இருக்குமுன்னு

aragalur ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுக்கள் ஆறகழூர் கன்னட கல்வெட்டு காமநாத மாணிக்ய ஆவணம் 2017 எண் 3 - கன்னட துண்டு கல்வெட்டு ரொம்ப சிரமப்படாம கிடைத்த கல்வெட்டு இது சென்ற வருடம் அத்தை மருமகளுக்கு வளைகாப்பு. அந்த நிகழ்சிக்காக ஆறகழூர் தேரோடும் வீதியில் உள்ள அத்தை வீட்டுக்கு சென்றிருந்தேன். சின்ன வயசில் இருந்து விளையாடிய இடம்தான் அது. முதல் பந்தியில் சாப்பிட்டுகிட்டு இருந்தாக..நான் வெளியே நாற்காலியில் உட்காந்துகிட்டு இருந்தேன்..வீட்டுக்கு பக்கத்தில் உள்ள காலி இடத்தில் மாடெல்லாம் கட்டி வச்சிருப்பாங்க.. அருகில் உட்காந்திருந்த ஒருவர் என்னப்பா வியாபாரமெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு .. நல்லா போயிட்டு இருக்கண்ணே.. எவ்வளவு பழமையான ஊரு இது .ஒரு தேரு போட்டா சுத்தி இருக்கிற எல்லா ஊரில் இருந்தும் சனம் வரும். ஒரு வாரத்துக்கு ஊரே அமக்களப்படும்..இப்ப தேர் போட்டே ரொம்ப வருசமாச்சி... எடுத்து செய்ய ஆள் இல்லன்ன.....எல்லாத்துக்கும் அவங்கவங்க வேலை..பாதிபேர் வெளியூரில் வேலை கிடைச்சி அங்கியே செட்டில் ஆயிட்டாங்க..இங்க கொஞ்சபேர்தான் இருந்து அல்லாடிகிட்டு இருக்கோம். இப்படியே உரையாடல் தொடர்ந்தது. சட்டுன்னு உ

Aragalur ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுகள் ஆறகழூர் கல்வெட்டுக்கள் எண் 2 - தன்மதாவள கல்வெட்டு வழக்கம் போல் காலை 7 மணி ஆறகழூர் டீக்கடையில் சூடா ஒரு வடை சாப்பிட்டுவிட்டு டீ குடித்து கொண்டிருந்தேன். உள்ளூர் அரசியல் தொடங்கி உலக அரசியல் வரை ஓடிக்கொண்டிருந்தது. காரசாரமான விவாதம் பண்ணிட்டு இருந்தாங்க. அப்ப ஊர்காரர் ஒருவர்.. என்னப்பா நீ கல்லு கல்லா தேடிகிட்டு இருக்கன்னு பேசிகிறாங்க.... ஆமாண்ணே...நம்ம ஊரு வரலாற்றை தெரிஞ்சிக்க கல்வெட்டுகளை தேடிகிட்டு இருக்கேன்... கல்வெட்டுன்னா...? கல்லுல எழுதிருப்பாங்கண்ணே..... அதுதான் நம்ம செவன் கோயிலுல நிறைய எழுதியிருக்கே.... அதெல்லாம் படிச்சிட்டாங்கண்ணே...அதை தவிர ஊருல வாய்க்க வரப்புல ஏதாவது இருக்கான்னு தேடிகிட்டு இருக்கேன்.. அட...ஆமாம்..எங்க வயலுக்கு பக்கத்துல வரப்புல ஒரு கல்லு கெடக்கு..அதிலியும் ஏதோ எழுத்து இருக்குற மாதிரிதான் தோணுது.. ஆஹா....சூப்பருண்ணு..உடனே அதை நான் பாக்கணுமே...!!!! இன்னிக்கி கொஞ்சம் வேலையிருக்கு நாளைக்கு வா காட்டுறேன்... அந்த வயலில் 5 வருசம் முன்னாடி உழவு ஓட்டும்போது டிராக்டர் பொதுக்குன்னு உள்ள இறங்கிடுச்சி.. அந்த இடத்தில் கிணறு