முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆறகழூர் கோட்டை

ஆறகழூர் கோட்டை ஆறகழூரில் கோட்டை இருந்ததற்கான தடயங்கள் வெளிப்படையாய் இப்போது இல்லை. கோட்டைக்கரை என்ற பெயர் மட்டுமே இங்கு கோட்டை இருந்ததற்கான ஆதாரமாய் உள்ளது.கி.பி.12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூர் மகதை மண்டலத்தின் தலைநகராக இருந்துள்ளது. தலைநகர் என்பதால் நிச்சயம் கோட்டை இருந்திருக்க வேண்டும். கோட்டைக்கரையில் வீடு கட்ட கடைக்கால் எடுக்கும் போது கல்தூண்கள் , அலங்கார வளைவு கற்கள் கிடைத்துள்ளன. எனவே கோட்டைக்கரை, மற்றும் அரசு பள்ளி இருக்கும் இடம் கோட்டை பகுதியாக இருந்திருக்க வாய்ப்புண்டு. . கோட்டையை சுற்றி பாதுகாப்புக்காக அகழிகள் இருந்துள்ளது ஆறு+அகழ்+ஊர்= ஆறகழூர் என்றும் ஆறே அகழியாக அமைந்ததால் ஆறகழூர் என பெயர் பெற்றது என்ற கருத்துக்கள் உண்டு 17 ஆம் நூற்றாண்டில் வேணுவராயன் என்ற சிற்றரசன் கோட்டை கட்டிக்கொண்டு அரசாண்டதாக லெபான் குறிப்பிடுகிறார். திப்புசுல்தான் இங்கு வரும்போது கல்வராயன் மலைப்பகுதிக்கு ஓடிவிட்டான் என்று சொல்லப்படும் செய்தியால் வேணுவராயன் காலம் திப்புசுல்தான் இறந்த 18 ஆம் நூற்றாண்டாகலாம்..ஆறகழூர் திருகாமீசுரமுடைய நாயனார் கோயிலின் தென்புற சுவரின் அருகே உள்ள பகுதி துலுக்கண் தோட்டம

ஆறகழூர் பின்னமான சிற்பங்கள்

செல்வன் சிறுதொண்டன் ? பின்னமானதால் ஆறகழூர் காமநாதீசுவரர் கோவிலில் வெளியேற்றப்பட்ட சிற்பங்கள் .இதில் 12ஆம் நூற்றாண்டி p ல் அப்பர்,சுந்தரர், திருநாவுக்கரசர், இந்த மூவருக்கும் செப்பு சிலைகள் செய்து வழிபாட்டுக்கு 15,000 பொற்காசுகள் அந்த காலத்திலேயே. கொடுத்த சிவத்தொண்டனும் இருப்பதுதான் வேதனை....              

பெரியேரி சூலகற்கள்

                      பெரியேரி சூலகற்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெரியேரி சூலகற்கள். இதுவரை அறியப்பட்டவை 2. அதில் ஒன்று படிக்கப்பட்டுவிட்டது. ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டுக்களில் பல நிலதானங்கள் பற்றிய செய்தி இருக்கு..அதில் ஒரு கல்வெட்டில் காமநாதீஸ்வரனுக்கு இறையிலியாக பெரியேரி ஏரியின் கீழ் நந்தவனம் அமைப்பதற்காக 1000 குழி நிலம் விடப்பட்டு சூலக்கல் நட்டு எல்லை வரையறுக்கப்பட்டுல்ளதாய் உள்ளது...சில மாதங்களுக்கு முன் அதை கண்டுபிடித்தேன்... நான்கு திசையிலும் கல் நட்டு எல்லை வரையறுக்கப்பட்டதாய் கல்வெட்டில் இருக்கு..அப்ப மத்த 3 திசையிலும் உள்ள கல் எங்கே...? மீண்டும் ஒரு ரவுண்டு சுற்றினேன்...ஏரிக்கு கிழக்குப்பகுதியில் ஒரு சோளக்காட்டுக்கு நடுவே வரப்பின் மேல் ஒர் சூலக்கல் இருந்தது... பாதி வரை மண்ணுக்கு அடியில் உள்ளது...முடிந்த வரை மண்ணை அகற்றிவிட்டு படம் எடுத்தேன்..ஆனா இதில் என்ன எழுதியிருக்குன்னுதான் தெரியல...??!!!! இந்த கல்லை குறிப்பிட்ட ஒரு நாளில் பெரியேரி ஆதி திராவிட மக்கள் வந்து வணங்குகிறார்கள்..அது எதுக்கா இருக்கும்..?ஊர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்

சுமை தாங்கி கல்

சமீபத்திய கல்வெட்டு.. ------------------------------------- சூலக்கற்களை தேடி பெரியேரி ஏரிக்கரையின் கீழ் இருக்கும் காட்டுப்பகுதியையும் வயல் வெளிகளையும் சுற்றி வந்த போது சாலை ஓரம் தற்செயலாய் இந்த கல்வெட்டு கண்ணில் பட்டது.. 1898 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு.. இதில் உள்ள செய்தி.... 1898 வைகாசி ம 3 தேதி பெரியேரி கிறமத்திலிருக்கும் வண்ணார் மாரிமுத்து மகன் சாண்டவறயன் பெஷாதி சொக்காயி அம்மாள் தர்மம் என உள்ளது.... என்ன தர்மம் செய்தார்கள்..?எதுக்கு தர்மம் செய்தார்கள் என தெரியவில்லை. .

ஆத்தூர் அய்யனார் சிற்பம்

வசிஷ்ட நதியில், கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர், முல்லைவாடியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று, மாரியம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கினர். அப்போது சாந்தி, 35, என்பவருக்கு அருள் வந்தது. அவர், 'கெட்டிமுதலி கோட்டை அருகே உள்ள வசிஷ்ட நதியில், புதைந்து கிடக்கும் சிலையை மீட்டால், மழை வரும்' என்றார். மதியம், 2:00 மணிக்கு, 30க்கும் மேற்பட்ட பெண்கள், பூஜை பொ ருட்கள், சேவல் கோழியுடன், சம்போடை வனம் அருகே, வசிஷ்ட நதிக்கு வந்தனர். பொக்லைன் மூலம், அங்கு பள்ளம் தோண்டியபோது, உருவம் இல்லாத உருளையான ஒன்றரை அடி உயரத்தில் கல் கிடைத்தது. அதற்கு பூஜை செய்து, கோழியை பலி கொடுத்தனர். இதையடுத்து, அங்கிருந்த மதுரகாளியம்மன் கோவில் பூசாரி ராஜாமணி, 60, 'ஆற்றின் கரை பகுதியொட்டி, ஆறு அடி ஆழத்தில் சிலை இருந்ததாக நினைவுள்ளது' என்றார். அந்த இடத்தை தோண்டியபோது, மூன்று அடி உயரம், இரண்டு அடி அகலத்தில், அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆத்தூர் ஆர்.டி.ஓ., செல்வன் தலைமையிலான