முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாகலூர் கல்வெட்டு

  ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL,D.pharm  தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம் செல் எண் : 9047514844, 7010580752                     கள்ளக்குறிச்சி மாவட்டம் நாகலூர் என்ற ஊரில் ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ள கயிலாயமுடைய  நாயனார் என்ற கோயிலில் உள்ள ஒரே ஒரு கல்வெட்டை பற்றி இங்கு பார்போம். நாகலூர் முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்டத்தில் இருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம்  பிரிக்கப்பட்ட பின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது. 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இந்த  ஊரை  நாகலூர் என்று அழைக்கிறது.                              ஊர் பெயர் காரணம் . பழங்காலத்தில் அமைந்த ஊர்கள் பெரும்பாலும் காரணப்பெயர்களாகவே அமைந்தது . ஆறு,மரங்கள்,ஏரி போன்றவற்றின் அடிப்படையிலும் ஊர்கள் பெயர்கள் அமைந்தன.  இந்த ஊரில் நாவல் மரங்கள் அதிகம் இருந்ததால் நாவலூர் என்ற பெயர்  ஏற்பட்டிருக்கலாம்.காலப்போக்கில் நாகலூர் என்று மருவி இருக்க கூடும். கல்வெட்டு இவ்வூரை  நாவலூர் என்றே அழைக்கிறது. இருப்பிடம் பண்டைய கோயில்கள் பெரும்பாலும் ஆற்றங்கரை ஓரத்திலேயே அமையப்பெற்றன. அந்த வகையில்  கோமுகி ஆற்றங்கரை