முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சின்னசேலம் கொற்றவை

சின்னசேலம் கொற்றவை

  சின்னசேலம் கொற்றவை           ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம் செல் எண் : 9047514844, 7010580752 சின்னசேலத்தில் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட   பழமையான கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு        சின்னசேலம் கொற்றவை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஏரிக்கரையில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.    சேலம் வரலாற்று ஆய்வுமையத்தலைவர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சின்னசேலம் ஏரிக்கரைப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டார்.அப்போது ஏரிக்கரையின் கிழக்குப்பகுதியில் 700 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.        சின்னசேலம் கொற்றவை கொற்றவை     கொற்றவை ஒரு பழமையான பெண் தெய்வமாகும். தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் கொற்றவை பற்றிய குறிப்புகள் உண்டு. பழையோள்,கானமர் செல்வி,பாய்கலைப்பாவை,காடுகிழாள் என்ற பெயர்களும் கொற்றவைக்கு உண்டு.கொற்றவையின் உருவ அமைப்பை சிலப்பதிகாரம் விரிவாக எடுத்துரைக்கிறது.மதுரை காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு கு