முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காட்டுமயிலூர் கொற்றவை

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் வரலாற்றை சொல்லும் கொற்றவை கொற்றவை சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், ஆகியோர் அடங்கிய குழு கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர் அப்போது, காட்டுமயிலூர் கிராமத்தில் பல்லவர் கால கொற்றவை ஒன்றையும் கண்டறிந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்தப்பகுதியின் பழமையையும் வரலாற் றையும் இந்த கொற்றவை சிற்பம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. கொற்றவை தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் பழையோள் என கொற்றவை குறிப்பிடப்படுகிறது.கொற்றவை ஒரு பழமையான பெண் தெய்வமாகும். கொற்றவையின் உருவ அமைப்பை சிலப்பதிகாரம் விரிவாக எடுத்துரைக்கிறது. இளங்கோவடிகள் மதுரை காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார். கானகத்தில் வசிக்கும் வேட்டுவர் தமக்கு வேட்டையில் வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக கொற்றவையை வழிபட்டுள்ளனர். பாய்கலைப்பாவை என்றும் கொற்றவை அழைக்கப்பட்டார்.பல்லவர் காலத்தில் கொற்றவை வழிபாடு சி