முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காட்டுமயிலூர் கொற்றவை








ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் வரலாற்றை சொல்லும் கொற்றவை
கொற்றவை
சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், ஆகியோர் அடங்கிய குழு கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர் அப்போது, காட்டுமயிலூர் கிராமத்தில் பல்லவர் கால கொற்றவை ஒன்றையும் கண்டறிந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்தப்பகுதியின் பழமையையும் வரலாற்றையும் இந்த கொற்றவை சிற்பம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

கொற்றவை
தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் பழையோள் என கொற்றவை குறிப்பிடப்படுகிறது.கொற்றவை ஒரு பழமையான பெண் தெய்வமாகும். கொற்றவையின் உருவ அமைப்பை சிலப்பதிகாரம் விரிவாக எடுத்துரைக்கிறது. இளங்கோவடிகள் மதுரை காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார். கானகத்தில் வசிக்கும் வேட்டுவர் தமக்கு வேட்டையில் வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக கொற்றவையை வழிபட்டுள்ளனர். பாய்கலைப்பாவை என்றும் கொற்றவை அழைக்கப்பட்டார்.பல்லவர் காலத்தில் கொற்றவை வழிபாடு சிறப்பாக இருந்துள்ளது. மன்னர்கள் போருக்கு செல்லும் முன் கொற்றவையை வணங்கி நவகண்டம் கொடுத்து சென்றால் வெற்றி கிடைக்கும் என நம்பினர். கொற்றவை பாலை நிலத்துக்கு உரிய கடவுளாக இலக்கியங்கள் கூறுகின்றன.சில நூல்கள் குறிஞ்சி நிலத்துக்கு உரிய கடவுளாகவும் குறிப்பிடுகின்றன. பிற்காலங்களில் துர்க்கை என்ற பெயரில் கொற்றவை வழிபாடு மாற்றமடைந்தது.


காட்டுமயிலூர் கொற்றவை
இக்கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் கருவரையில் இக்கொற்றவை தற்போதும் செல்லியம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது. பல்லவர்கள் வலுவிழந்த 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பமாக இதை கருதலாம். ஒரு பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது.இதன் உயரம் 132 செ.மீ,அகலம் 73 செ.மீ ஆகும். தலையில் கரண்ட மகுடம்,காதுகளில் பத்ரகுண்டலம்,கழுத்தில் சவடி,சரபளி போன்ற அணிகலன்களுடன் காணப்படுகிறார். மார்புக்கச்சை பட்டையுடன் காட்டப்பட்டுள்ளது.பின்புறம் சூலம்,எட்டு கரங்களுடன் காணப்படுகிறார்.வலது பின்கரங்களில் பிரயோக சக்கரம், நீண்டவாள், மணி போன்றவையும், வலது முன்கரம் அபய முத்திரையிலும் உள்ளது. இடது பின் கரங்களில் சங்கு,வில்,கேடயம் போன்றவையும் உள்ளது. இடது முன்கரம் கடியஸ்த நிலையில் உள்ளது. இடுப்பில் அரையாடையும் ஆடை முடிச்சும் காட்டப்பட்டுள்ளது. கீழ் வலது புறம் நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரன் உள்ளார். போரில் வெற்றி பெற தன் உடலில் உள்ள ஒன்பது பாகங்களை வெட்டி கொற்றவைக்கு படையலிட்டு தன்னைத்தானே பலி கொடுத்து கொள்பவன் நவகண்ட வீரன் ஆவான்.இடது புறம் வணங்கிய நிலையில் அடியவர் ஒருவர் உள்ளார்.கொற்றவையின் வாகனமான சிங்கமும்,மானும் வீரர்களுக்கு மேற்புறம் உள்ளது. கொற்றவையின் தலைக்கு அருகே இடது புறம் கிளி உள்ளது. எருமைத்தலையின் மீது நேராக நின்ற நிலையில் கொற்றவை காட்டப்பட்டுள்ளார்.
காட்டுமயிலூரில் உள்ள திருக்கரம்தோன்றீசுவரர் கோயிலில் உள்ள பாண்டியர்கால கல்வெட்டுகள் மூலம் இந்த ஊர் கோழியூர் பற்றின் கீழ் இருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது
  
கொற்றவைதொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் பழையோள் என கொற்றவை குறிப்பிடப்படுகிறது.கொற்றவை ஒரு பழமையான பெண் தெய்வமாகும். கொற்றவையின் உருவ அமைப்பை சிலப்பதிகாரம் விரிவாக எடுத்துரைக்கிறது. இளங்கோவடிகள் மதுரை காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார். கானகத்தில் வசிக்கும் வேட்டுவர் தமக்கு வேட்டையில் வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக கொற்றவையை வழிபட்டுள்ளனர். பாய்கலைப்பாவை என்றும் கொற்றவை அழைக்கப்பட்டார்.பல்லவர் காலத்தில் கொற்றவை வழிபாடு சிறப்பாக இருந்துள்ளது. மன்னர்கள் போருக்கு செல்லும் முன் கொற்றவையை வணங்கி நவகண்டம் கொடுத்து சென்றால் வெற்றி கிடைக்கும் என நம்பினர். கொற்றவை பாலை நிலத்துக்கு உரிய கடவுளாக இலக்கியங்கள் கூறுகின்றன.சில நூல்கள் குறிஞ்சி நிலத்துக்கு உரிய கடவுளாகவும் குறிப்பிடுகின்றன. பிற்காலங்களில் துர்க்கை என்ற பெயரில் கொற்றவை வழிபாடு மாற்றமடைந்தது.காட்டுமயிலூர் கொற்றவைஇக்கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் கருவரையில் இக்கொற்றவை தற்போதும் செல்லியம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது. பல்லவர்கள் வலுவிழந்த 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பமாக இதை கருதலாம். ஒரு பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது.இதன் உயரம் 132 செ.மீ,அகலம் 73 செ.மீ ஆகும். தலையில் கரண்ட மகுடம்,காதுகளில் பத்ரகுண்டலம்,கழுத்தில் சவடி,சரபளி போன்ற அணிகலன்களுடன் காணப்படுகிறார். மார்புக்கச்சை பட்டையுடன் காட்டப்பட்டுள்ளது.பின்புறம் சூலம்,எட்டு கரங்களுடன் காணப்படுகிறார்.வலது பின்கரங்களில் பிரயோக சக்கரம், நீண்டவாள், மணி போன்றவையும், வலது முன்கரம் அபய முத்திரையிலும் உள்ளது. இடது பின் கரங்களில் சங்கு,வில்,கேடயம் போன்றவையும் உள்ளது. இடது முன்கரம் கடியஸ்த நிலையில் உள்ளது. இடுப்பில் அரையாடையும் ஆடை முடிச்சும் காட்டப்பட்டுள்ளது. கீழ் வலது புறம் நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரன் உள்ளார். போரில் வெற்றி பெற தன் உடலில் உள்ள ஒன்பது பாகங்களை வெட்டி கொற்றவைக்கு படையலிட்டு தன்னைத்தானே பலி கொடுத்து கொள்பவன் நவகண்ட வீரன் ஆவான்.இடது புறம் வணங்கிய நிலையில் அடியவர் ஒருவர் உள்ளார்.கொற்றவையின் வாகனமான சிங்கமும்,மானும் வீரர்களுக்கு மேற்புறம் உள்ளது. கொற்றவையின் தலைக்கு அருகே இடது புறம் கிளி உள்ளது. எருமைத்தலையின் மீது நேராக நின்ற நிலையில் கொற்றவை காட்டப்பட்டுள்ளார்.காட்டுமயிலூரில் உள்ள திருக்கரம்தோன்றீசுவரர் கோயிலில் உள்ள பாண்டியர்கால கல்வெட்டுகள் மூலம் இந்த ஊர் கோழியூர் பற்றின் கீழ் இருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது  மூன்றாம் மாறவர்ம திருபுவன சக்கரவத்திகள் விக்கிரமபாண்டியனின் 5 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டானது காட்டுமயிலூர் கோழியூர் பற்றின் கீழ் இருந்ததை குறிப்பிடுகிறது.  இறை வழிபாடு, படையல், திருப்பணிக்கு நன்செய் நிலம் இரண்டு மாவும் புன்செய் நிலம் நான்கு மாவும் தரப்பட்டுள்ளன. இது கல்வெட்டிலும் செப்பேட்டிலும் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த செப்பேடு தற்போது கிடைக்கவில்லை. சோழகங்கதேவன் என்பவர் இங்கு ஒப்பில்லா முலைநாச்சியார் என்ற அம்மன் கோயிலை ஏற்படுத்தி நிலதானம் செய்துள்ளார். இந்த சோழகங்கதேவன் என்பவர் வாண கோவரையனிடம் பணியாற்றிய தளபதியாய் இருக்க வாய்ப்புள்ளது. எராங்குடையான், பல்லவராயன் என்ற அதிகாரிகள் இதில் கையொப்பம் இட்டு உள்ளனர். இக்கோயிலில் உள்ள வன்னி மரத்தடியில் உள்ள பிள்ளையார் சிலையின் அடியில் உள்ள கல்வெட்டில் இருங்கோளப்பாடி நாட்டு பாணப்புற பற்றை சேர்ந்த கொற்றலூரில் பல்லவன் சேதிராயன் என்பவர் ஏரி வெட்டுவித்த செய்தியும் உள்ளது. கல்வெட்டின் மேற்பகுதியில் யானையின் வடிவம் உள்ளது
ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
https://www.vikatan.com/news/spirituality/150316-found-new-kotravai-idol-near-veppur-cuddalore-district.html

http://www.nntweb.com/news-view.php?nid=802&nalias=%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் வரஞ்சரம் லகுலீசர்                                                           வரஞ்சரம் சிவன் கோயில் 10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட...

ஆத்தூர் அய்யனார் சிற்பம்

வசிஷ்ட நதியில், கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர், முல்லைவாடியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று, மாரியம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கினர். அப்போது சாந்தி, 35, என்பவருக்கு அருள் வந்தது. அவர், 'கெட்டிமுதலி கோட்டை அருகே உள்ள வசிஷ்ட நதியில், புதைந்து கிடக்கும் சிலையை மீட்டால், மழை வரும்' என்றார். மதியம், 2:00 மணிக்கு, 30க்கும் மேற்பட்ட பெண்கள், பூஜை பொ ருட்கள், சேவல் கோழியுடன், சம்போடை வனம் அருகே, வசிஷ்ட நதிக்கு வந்தனர். பொக்லைன் மூலம், அங்கு பள்ளம் தோண்டியபோது, உருவம் இல்லாத உருளையான ஒன்றரை அடி உயரத்தில் கல் கிடைத்தது. அதற்கு பூஜை செய்து, கோழியை பலி கொடுத்தனர். இதையடுத்து, அங்கிருந்த மதுரகாளியம்மன் கோவில் பூசாரி ராஜாமணி, 60, 'ஆற்றின் கரை பகுதியொட்டி, ஆறு அடி ஆழத்தில் சிலை இருந்ததாக நினைவுள்ளது' என்றார். அந்த இடத்தை தோண்டியபோது, மூன்று அடி உயரம், இரண்டு அடி அகலத்தில், அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆத்தூர் ஆர்.டி.ஓ., செல்வன் தலைமையிலான...

சேலம் மாவட்ட கோட்டைகள்

                                  சேலம் மாவட்ட கோட்டைகள்     சேலம் மாவட்ட கோட்டைகள் வரலாற்றில் சேலம் மாவட்டம் எப்போதுமே முக்கிய பங்கு வகித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் பல கோட்டைகள் இருந்திருந்தாலும் இன்றைய நிலையில் சில கோட்டைகளே பார்க்க கூடிய நிலையில் உள்ளன அவை... 1. ஆத்தூர் கோட்டை 2. சங்ககிரி கோட்டை 3. நாமக்கல் கோட்டை(பழைய சேலம் மாவட்டம்) கால வெள்ளத்தில் காணாமல் போன கோட்டைகள் 4. ஓமலூர் கோட்டை 5. சேலம் கோட்டை 6. நங்கவல்லி கோட்டை 7. சேந்தமங்கலம் கோட்டை 8. பரமத்தி கோட்டை 9. பேளூர் கோட்டை 10. பெத்தநாயக்கன் பாளையம் கோட்டை 11. ஆறகழூர் கோட்டை 12. மேச்சேரிக்கோட்டை 13. அமரகுந்தி கோட்டை 14. தம்மம்பட்டி கோட்டை... ஆத்தூர் கோட்டை நாமக்கல் கோட்டை சங்ககிரி கோட்டை இது தவிர சேலம் மாவட்டத்தில் உங்களுக்கு தெரிஞ்ச கோட்டை இருந்தா சொல்லுங்க நண்பர்களே...