முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய கற்கால கருவிகள்

வாழப்பாடி அடுத்த பெலாப்பாடி மலை கிராமத்தில் புதிய கற்காலக் கருவிகள்:
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்தனர்:


வாழப்பாடி, நவ.04:-

 சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெலாப்பாடி மலை கிராமத்தில் பழமையான கோவில் வளாகத்தில் நுாற்றுக்கும் அதிகமான, 6,000 ஆயிரம் பழைமையான புதிய கற்கால கருவிகளை வைத்து பாதுகாத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருவதை சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலை மற்றும் கல்வராயன் மலை கிராமங்கள், 6,000 ஆண்டுகளுக்கு முன்னரே பழங்கால மக்களின் வாழிடமாக இருந்ததை அப்பகுதியில் கிடைத்து வரும் புதிய கற்கால கருவிகள் மற்றும் கல்வெட்டுகள், நடுகற்கள் ஆகியவை உறுதிப்படுத்தி வருகின்றன.
ஏற்கனவே, கல்வராயன்மலை சேம்பூர், அத்திரிப்பட்டி, கிராங்காடு, குன்னுார் மற்றும் அருநுாற்றுமலை பள்ளிக்காடு, சிறுமலை உள்ளிட்ட  கிராமத்தில் புதிய கற்கால கருவிகளும், இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்படும் ஈமச்சின்னங்களான கற்திட்டைகள் மற்றும் கற்குவைகளும் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினரால் கண்டறியப்பட்டது. 
 சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆறகளூர் வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், கவிஞர் மன்னன், ஆசிரியர்கள் கலைச்செல்வன், பெருமாள், ஓமலூர் சீனிவாசன், ஜீவநாராயணன் ஆகியோர் கொண்ட குழுவினர் பெலாப்பாடி மலை கிராமத்தில் களஆய்வு மேற்கொண்டனர். அந்த கிராமத்திலுள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில், இரு நந்தி சிலைகள், ஒரு பிள்ளையார் சிலை மற்றும் நுாற்றுக்கும் அதிகமான கைக்கோடாரி வகையை சேர்ந்த புதிய கற்கால கருவிகளையும் வைத்து பாதுகாத்து வருவதையும், அவற்றை இன்றளவிலும் வழிபட்டு வருவதையும் கண்டறிந்தனர்.
  அதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மைத்தினர் கூறியது:
பழங்காலத்தில் நாடோடியாக வாழ்ந்த மனிதன் ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகள் அருகில் உள்ள மலைப்பாங்கான இடங்களில் நிலையாகத் தங்க ஆரம்பித்தான். ஆரம்ப கட்டத்தில் வேட்டையாட பயன்படுத்திய ஒழுங்கற்ற நிலையில் இருந்த கற்கருவிகளை தேய்த்து வளவளப்பாக மெருகூட்டிப் பயன்படுத்தினான். அக்காலமே புதிய கற்காலம் எனவும், அந்த காலகட்டத்தில் மனிதன் பயன்படுத்திய கருவிகளை புதிய கற்காலக் கருவிகள் எனவும் வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலை மற்றும் கல்வராயன் மலைப்பகுதியில் கி.மு.2000 ஆண்டு வரை புதிய கற்காலம் இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. ஏராளமான கிராமங்களில் நீர்நிலைகளில் சிதறிக்கிடந்த பழங்கால மனிதர்கள் பயன்படுத்தி புதிய கற்கால கருவிகளை சேகரித்து கோவில்களில் வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலை ஆலடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெலாப்பாடி மலை கிராமத்தில் பழமையான ஈஸ்வரன் கோவிலில் வைத்து மக்கள் வழிபட்டு வரும் புதிய கற்கால கருவிகள் சிறிய கைக்கோடாரிகள் வகையை சேர்ந்ததாகும். ஒருபுறம் கூராகவும் மற்றொறுபுறம் தட்டையாகவும் உள்ளது. கூரான முனை குத்திக் கிழிக்கவும் தட்டையான பகுதி வெட்டவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் வரஞ்சரம் லகுலீசர்                                                           வரஞ்சரம் சிவன் கோயில் 10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட...

ஆத்தூர் அய்யனார் சிற்பம்

வசிஷ்ட நதியில், கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர், முல்லைவாடியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று, மாரியம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கினர். அப்போது சாந்தி, 35, என்பவருக்கு அருள் வந்தது. அவர், 'கெட்டிமுதலி கோட்டை அருகே உள்ள வசிஷ்ட நதியில், புதைந்து கிடக்கும் சிலையை மீட்டால், மழை வரும்' என்றார். மதியம், 2:00 மணிக்கு, 30க்கும் மேற்பட்ட பெண்கள், பூஜை பொ ருட்கள், சேவல் கோழியுடன், சம்போடை வனம் அருகே, வசிஷ்ட நதிக்கு வந்தனர். பொக்லைன் மூலம், அங்கு பள்ளம் தோண்டியபோது, உருவம் இல்லாத உருளையான ஒன்றரை அடி உயரத்தில் கல் கிடைத்தது. அதற்கு பூஜை செய்து, கோழியை பலி கொடுத்தனர். இதையடுத்து, அங்கிருந்த மதுரகாளியம்மன் கோவில் பூசாரி ராஜாமணி, 60, 'ஆற்றின் கரை பகுதியொட்டி, ஆறு அடி ஆழத்தில் சிலை இருந்ததாக நினைவுள்ளது' என்றார். அந்த இடத்தை தோண்டியபோது, மூன்று அடி உயரம், இரண்டு அடி அகலத்தில், அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆத்தூர் ஆர்.டி.ஓ., செல்வன் தலைமையிலான...

சேலம் மாவட்ட கோட்டைகள்

                                  சேலம் மாவட்ட கோட்டைகள்     சேலம் மாவட்ட கோட்டைகள் வரலாற்றில் சேலம் மாவட்டம் எப்போதுமே முக்கிய பங்கு வகித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் பல கோட்டைகள் இருந்திருந்தாலும் இன்றைய நிலையில் சில கோட்டைகளே பார்க்க கூடிய நிலையில் உள்ளன அவை... 1. ஆத்தூர் கோட்டை 2. சங்ககிரி கோட்டை 3. நாமக்கல் கோட்டை(பழைய சேலம் மாவட்டம்) கால வெள்ளத்தில் காணாமல் போன கோட்டைகள் 4. ஓமலூர் கோட்டை 5. சேலம் கோட்டை 6. நங்கவல்லி கோட்டை 7. சேந்தமங்கலம் கோட்டை 8. பரமத்தி கோட்டை 9. பேளூர் கோட்டை 10. பெத்தநாயக்கன் பாளையம் கோட்டை 11. ஆறகழூர் கோட்டை 12. மேச்சேரிக்கோட்டை 13. அமரகுந்தி கோட்டை 14. தம்மம்பட்டி கோட்டை... ஆத்தூர் கோட்டை நாமக்கல் கோட்டை சங்ககிரி கோட்டை இது தவிர சேலம் மாவட்டத்தில் உங்களுக்கு தெரிஞ்ச கோட்டை இருந்தா சொல்லுங்க நண்பர்களே...