முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கீழ்பெரும்பாக்கம் முருகன்

 கீழ்பெரும்பாக்கம் முருகன்  விழுப்புரம் மாவட்டம் முருகனைப் பற்றிய குறிப்புக்கள் முதன் முதலில் திருத்தணியில் 900 AD காலத்தை சேர்ந்த பல்லவ அபராஜித்தவர்மனின் கல்வெட்டுக்களின் மூலமே  தெரியவந்தன - நாகஸ்சாமி  - 1979 ) ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கூட முருகனின் சிலைகள் அபூர்வமாகவே செதுக்கப்பட்டு இருந்துள்ளன. அவருடைய  சிற்பங்கள் சோமாஸ்கந்தன் சிலைகளுடனும், பல்லவர் காலத்தைய கல்வெட்டுக்களிலும், அவர்கள் நிறுவிய ஆலயங்களிலும்தான் கிடைத்தன. ( இதற்கு முன்னர் எட்டாம் நூற்றாண்டில் நின்ற நிலையில் உள்ள  முருகனின் சிலைகள் இரண்டு கிடைத்துள்ளன.  அவற்றில் ஒன்று எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த சிலை நேஷனல் மியூசியத்தில் உள்ளது   -'L'Hernault 1978: 111. p. 621. ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டாவது சிலை பல்லவ அபராஜித்தவர்மனின் காலத்தில் திருத்தணியில் மூலவார இருந்த சிலை என்று நம்பப்படுகிறது. ஆனால் அது தற்போது ஆலய மண்டபத்தின் முகப்பில் காணப்படுகிறது. - நாகஸ்சாமி  1979, ஆனால் இதை சோழர்கள் காலத்து முற்பகுதியை சேர்ந்தது என்கிறார்  L' Hernault, p.111, ph. 63) இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சிலை