இடுகைகள்

சேலம் மாவட்ட தொல்லியல் தடயங்கள்

  சேலம் மாவட்ட தொல்லியல் தடயங்கள் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் M.A.Mphil.D.pharm தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்                   பழங்காலத்தில் மனிதன் காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் வாழ்ந்த போது வேட்டையாட பல்வேறு கல்லால் ஆன கருவிகளை பயன்படுத்தினான். அவை பழைய கற்காலகருவிகள்,புதிய கற்கால கருவிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த கருவிகள் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் வாழ்வியல் முறைகளை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.மனிதன் இறந்த பின் என்ன நடக்கும் என்ற கேள்வி மனிதனுள் ஆதிகாலம் முதலே எழுந்து வந்துள்ளது. ஆரம்பத்தில் இறந்த மனிதனை அதே இடத்தில் விட்டு விட்டு உணவை தேடி அடுத்த பகுதிக்கு இடம் பெயர்ந்தான். நிலையாக விவசாயம் செய்ய துவங்கிய பின் ஒரே இடத்தில் தங்கி மனிதன் வாழத்துவங்கினான்.     மனிதன் ஒரே இடத்தில் தங்கி வாழத்துவங்கிய பின் தன் கூட்டத்தில் இறந்த முக்கியமான தலைவனுக்கு நினைவுச்சின்னம் அமைக்கத்துவங்கினான்.நால்வகை நிலங்களுக்கும் ஏற்ப நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டன.  மலைப்பகுதியிலும் ,நிலப்பகுதியிலும் வெவ்வேறு வகையில் அடையாளச்சின்னங்கள் அமைக்கப்பட்டன. இவை ஈமச்சின்னன்கள் என அழைக்கப்பட்டன.உலகம்
சமீபத்திய இடுகைகள்