முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆறகழூர் கோட்டை

சேலம் அழிந்த கோட்டைகள் சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், அமரகுந்தி,ஆண்டிக்கரை,ஆறகழூர்,ஓமலூர்,காவேரிபுரம்,காடையாம்பட்டி,சங்ககிரி,சேலம் ,பேளூர்,மேச்சேரி போன்ற இடங்களில் கலைநயம் மிக்க கோட்டைகள் இருந்துள்ளன. அவற்றில் ஆத்தூர்,சங்ககிரி போன்ற சில இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆறகழூர் கோட்டை 12 ஆம் நூற்றாண்டில் மகதை நாட்டின் தலைநகராக ஆறகழூர் இருந்தது.ஆறகழூரை சுற்றி வலிமையான ஒரு கோட்டை இருந்துள்ளது .இந்த கோட்டையை சுற்றி பாதுகாப்புக்காக 6 அகழிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் ஆறு+அகழ்+ஊர் ஆறகழூர் என்ற பெயரை பெற்றது. ஆறகழூரின் பழைய பெயர் ஆறை. இன்று இரண்டு அகழிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. கோட்டை முழுதுமாய் அழிந்து விட்டது. கோட்டைகரை என்ற பெயர் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த கோட்டைக்கரையில் வீடுகட்ட அஸ்திவாரம் எடுக்கும்போது கோட்டையின் சிதைந்த பகுதிகள், செங்கற்கள் ,கல்லின் சிதைந்த பகுதிகள் கிடைக்கின்றன. வாணகோவரையர்கள்,சோழர்கள்,பாண்டியர்கள்,ஹெய்சாளர்கள்,விசயநகரபேரரசு, நாயக்கர்களின் ஆட்சி இங்கு நடைபெற்றுள்ளது. வாணகோவரையர்களுக்கும் ஹெய்சாளர்களுக்கும் இடையே போர் நடந்தபோது ஆறகழூர் கோட்டை தாக்குதலுக்கு உள்ளாக

நிலவறையில் சிற்பங்கள்

நிலவறையில் கிடைத்த சிற்பங்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தலைவாசலில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, நாவக்குறிச்சி. இங்குள்ள ஶ்ரீதேவி பூதேவி சமேத பூரணப் பெருமாள்கோயில் மற்றும் தையல்நாயகி உடனுறை வைத்தீஸ்வரன் கோயில் மிகவும் பழைமை வாய்ந்த கோயில். நாவக்குறிச்சி கோயிலில் ஆஞ்சநேயர் சிலையைக் கோயிலின் உள்ளேயே வேறு இடத்துக்கு மாற்றிவைக்க முடிவுசெய்து, குழி தோண்டியபோது ஐந்தடி ஆழத்தில் நிலவறை இருப்பது தெரியவந்தது. உடனே ஊர் மக்கள் இந்து அறநிலையத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க, அரசு அதிகாரிகள் முன்னிலையில் அந்த நிலவறையைத் திறந்து பார்த்தார்கள். அங்குள்ள நிலவறையில் பெருமாள், ஶ்ரீதேவி, பூதேவி, சக்கரத்தாழ்வார், உள்பட 9 ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. இந்தக் கோயில் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாகப் புறப்பட்டுப் போனோம். பூரணப்பெருமாள் கோயிலுக்கு 1917-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறார்கள். அதன் பிறகு கோயில் பெரிதாகப் பராமரிக்கப்படாமலே இருந்துவந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஊர்மக்கள் கூடி, சிதிலமடைந்திருந்த கோயிலைச் சீர்செய்து, முறையாகப் பராமரி

sakthi vikatan silai final

கல்வராயன்மலை புதியகற்காலகருவிகள்

தலைவாசல் அருகே புதிய கற்காலகருவிகள் கண்டுபிடிப்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே கல்வராயன் மலையில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்காலகருவிகள் கண்டறியப்பட்டுள்ளது. சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ,ஆசிரியர்கள் பெருமாள், கலைச்செல்வன்,மருத்துவர் பொன்னம்பலம், சீனிவாசன்,கவிஞர் மன்னன்,ஜீவநாராயணன் ஆகியோர் அடங்கிய குழு தலைவாசல் அருகே கல்வராயன் மலையில் உள்ள மேல்பாச்சேரி ,தாழ்பாச்சேரி கிராமகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சிறு விநாயகர் கோயிலில் 50 க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகள் கண்டறியப்பட்டன. இக்கருவிகள் மூலம் முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்கை நிலையை அறிய முடிகிறது. புதிய கற்காலமக்கள் ஆதிமனிதன் காடுகளில் வாழ்ந்த போது வேட்டையாட கற்களால் ஆன கருவிகளையும் உறுதியான மரக்குச்சிகளையும் பயன்படுத்தி வந்தான். தொல் பழங்காலமானது பழைய கற்காலம், நுண்கற்காலம், புதியகற்காலம், பெருங்கற்காலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த கற்கருவிகள் புதிய கற்கால வகையை சேர்ந்தது. புதிய கற்காலமானது 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்பட

ஆறகழூர்

அடிப்படை வசதி இல்லாத ஆறகழூரின் அவலம் இன்றைய காலைக்கதிர் செய்தி 5-11-2017

புதிய கற்கால கருவிகள்

வாழப்பாடி அடுத்த பெலாப்பாடி மலை கிராமத்தில் புதிய கற்காலக் கருவிகள்: சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்தனர்: வாழப்பாடி, நவ.04:-  சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெலாப்பாடி மலை கிராமத்தில் பழமையான கோவில் வளாகத்தில் நுாற்றுக்கும் அதிகமான, 6,000 ஆயிரம் பழைமையான புதிய கற்கால கருவிகளை வைத்து பாதுகாத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருவதை சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலை மற்றும் கல்வராயன் மலை கிராமங்கள், 6,000 ஆண்டுகளுக்கு முன்னரே பழங்கால மக்களின் வாழிடமாக இருந்ததை அப்பகுதியில் கிடைத்து வரும் புதிய கற்கால கருவிகள் மற்றும் கல்வெட்டுகள், நடுகற்கள் ஆகியவை உறுதிப்படுத்தி வருகின்றன. ஏற்கனவே, கல்வராயன்மலை சேம்பூர், அத்திரிப்பட்டி, கிராங்காடு, குன்னுார் மற்றும் அருநுாற்றுமலை பள்ளிக்காடு, சிறுமலை உள்ளிட்ட  கிராமத்தில் புதிய கற்கால கருவிகளும், இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்படும் ஈமச்சின்னங்களான கற்திட்டைகள் மற்றும் கற்குவைகளும் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினரால் கண்டறியப்பட்டது.   சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்