முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏற்காடு மாரமங்கலம் புதிய கற்கால கருவிகள் காட்டுபன்றி குத்தி பட்டான் நடுகல்

ஏற்காடு மாரமங்கலம் காட்டுபன்றிகுத்திபட்டான் நடுகல் மற்றும் புதிய கற்கால கருவிகள் கடந்த சனிக்கிழமை அன்று 29 ஜூலை  2017 அன்று கலைச்செல்வன் ஆசிரியர் மற்றும் பெருமாள் ஆசிரியர் இருவரும் ஏற்காடு பகுதியில் தேடலை மேற்கொண்டனர் .மோசமான சாலையிலும் கடுமையாக முயற்சித்து கல்வெட்டுக்களையும் ,ஒரு பன்றிகுத்தி பட்டான் நடுகல்லையும் கண்டறிந்தனர். அடுத்த நாள் ஞாயிற்று கிழமை நம் சேலம் வரலாற்று ஆய்வு மைய குழுவானது விழுப்புரம் வீரராகவன் அய்யாவை அழைத்துக்கொண்டு ஏற்காடு கிளம்பியது.  80% நல்ல சாலை 20% செங்குத்தான மிகச்சரிவான மண்சாலையில் பயணித்தோம். 13 ஆம் நூற்றாண்டு கோயிலில் 4 கல்வெட்டுக்கள் படி எடுத்தோம். கல்வெட்டுடன் கூடிய காட்டுபன்றி குத்தி பட்டான் கல்லில் உள்ள எழுத்துக்களையும் படித்தறிந்தோம். Kalai SelvanKaliyappan SrinivasanPerumal Madhu NavinPonnambalam ChidambaramJeevanarayanan SelvakumarPeriyar MannanOotykrishna ஆகிய சேலம் வரலாற்று ஆய்வு மைய உறுப்பினர்கள் பங்கு கொண்டனர். காட்டுப்பன்றி குத்தி பட்டான் கல், மற்றும் புதிய கற்கால கருவிகள் பற்றிய செய்தி இன்றைய தினமணி, காலைக்கதிர்,தினகரன் செய்திதாட்களில் செ