முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆறகழூர் வாண்டையார் கல்வெட்டு-aragalur

  ஆறகழூர் வாண்டையார் கல்வெட்டு விழுப்புரம் வீரராகவன் சார்,ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ஆய்வின் போது ஆறகழூர் வாண்டையார் கல்வெட்டு கி.பி 12 ஆம் நூற்றாண்டில் மகதை மண்டலத்தின் தலைநகராய் ஆறகழூர் இருந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டுக்கு பின் தன் பெருமையையும் முக்கியத்துவத்தையும் இழந்தது. இருப்பினும் இங்குள்ள கோயில்களும் ,கல்வெட்டுகளும் தம் பெருமையை இன்னும் நிலை நாட்டிக்கொண்டு உள்ளன. காடுகளிலும், வயல்வெளிகளிலும் இன்னும் வரலாற்று சான்றுகள் ஒளிந்து கிடக்கின்றன. இப்படி வயல்களில்,வரப்பில் இருந்த 5 கல்வெட்டுகளை சேலம் வரலாற்று ஆய்வு மையம் கடந்த சில ஆண்டுகளில் கண்டறிந்து வெளிப்படுத்தியது. ஊருக்குள் வெளிப்பாளையம் என்ற இடத்தில் வயலுக்கு உள்ளே ஒரு நவகண்ட சிற்பம் இருந்தது.அதை பல முறை பார்த்துள்ளேன்.அதை சுற்றி எப்போதும் புல் முளைத்து கிடக்கும்.சமீபத்தில் அந்த இடத்தை சுத்தம் செய்த போது ஒரு எழுத்துள்ள கல் இருப்பது தெரிந்தது. எங்க ஊர் பையன் ஒருவர் அதை முகநூலில் பதிவு செய்ய ,அன்பு மகள் கெளதமி அது குறித்து தகவல் தெரிவித்தார். பின் நம் ஆய்வு மையம் சார்பில் அக்கல்வெட்டு ஆய்வு செய்யப்பட்டு இன்று செய்தி வெளிய