மூக்கறுப்பு போர் நடந்ததிற்கான முதல் கல்வெட்டு ஆதாரம் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.
கி.பி. 2015 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூருக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு கல்வெட்டுக்கள் ஏதாவது கிடைக்குமா என தேடியபோது அங்காளம்மன் கோயில் முன்புள்ள பாக்குத்தோப்பில் ஓர் கல்வெட்டு இருப்பதாய் சொன்னார்கள். போய் பார்த்த போது அக்கல்வெட்டு பாதி பூமியில் புதைந்திருந்தது. அதை புகைப்படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். அதன் பின் சேலம் வரலாற்று தேடல் குழு என்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன், கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் அய்யா துணைத்தலைவர் கலைச்செல்வன் ஆசிரியர், செயலாளர் மருத்துவர் பொன்னம்பலம், இணைச்செயலாளர் பெரியார்மன்னன், பொருளாளர் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழு இக்கல்வெட்டை ஆய்வு செய்து மூக்கறுப்பு போர் நடந்ததற்கான ஆதாரத்தை கண்டு பிடித்தது .இதைப்பற்றி சன்னல் இதழ் வெளியிட்ட கட்டுரை
கருத்துகள்
கருத்துரையிடுக