முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாகலூர் கல்வெட்டு

 ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL,D.pharm 

தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்

செல் எண் : 9047514844, 7010580752

                   




கள்ளக்குறிச்சி மாவட்டம் நாகலூர் என்ற ஊரில் ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ள கயிலாயமுடைய

 நாயனார் என்ற கோயிலில் உள்ள ஒரே ஒரு கல்வெட்டை பற்றி இங்கு பார்போம்.

நாகலூர் முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்டத்தில் இருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம்

 பிரிக்கப்பட்ட பின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது. 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இந்த

 ஊரை

 நாகலூர் என்று அழைக்கிறது.

                            



ஊர் பெயர் காரணம்.

பழங்காலத்தில் அமைந்த ஊர்கள் பெரும்பாலும் காரணப்பெயர்களாகவே அமைந்தது

. ஆறு,மரங்கள்,ஏரி போன்றவற்றின் அடிப்படையிலும் ஊர்கள் பெயர்கள் அமைந்தன.

 இந்த ஊரில் நாவல் மரங்கள் அதிகம் இருந்ததால் நாவலூர் என்ற பெயர்

 ஏற்பட்டிருக்கலாம்.காலப்போக்கில் நாகலூர் என்று மருவி இருக்க கூடும். கல்வெட்டு இவ்வூரை

 நாவலூர் என்றே அழைக்கிறது.

இருப்பிடம்

பண்டைய கோயில்கள் பெரும்பாலும் ஆற்றங்கரை ஓரத்திலேயே அமையப்பெற்றன. அந்த வகையில்

 கோமுகி ஆற்றங்கரை ஓரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் ஊரானது

 இக்கோயில் இருக்கும் பகுதியை சுற்றி இருந்திருக்க கூடும். தற்போது கள்ளக்குறிச்சி உளுந்தூர்

 பேட்டை சாலையில் குடியிருப்புகள், கடைகள் ஏற்பட்டு கோயிலை விட்டு தள்ளி ஊர் நிலை

 பெற்றுள்ளது.

                           




நாகலூருக்கு அருகே வரஞ்சரம் என்ற பழமையான ஊர் அமைந்துள்ளது. இது பல்லவர் கால

 கோயிலாக இருக்க கூடும், பின்னர் மறுசீரமைக்கப்பட்டிருக்க கூடும்.பல்லவர் கால கோயில் என

 கருத இங்குள்ள லகுலீசர் சிற்பமும், கதிர் விநாயகர் சிற்பமும் சான்றாக அமைகிறது. நாகலூர்

 கல்வெட்டை கண்டறிந்து படிக்கும்போது, இந்த லகுலீசர் சிற்பத்தையும் கண்டறிந்தோம்

.கோயில் மிகச் சிறிய அளவிலேயே அமைந்துள்ளது. .கோட்டச்சிற்பங்களும் தற்போது

 காணப்படவில்லை. செங்கள் தளியாக இருப்பதால் கோயில் கருவறைப்பகுதியில் கல்வெட்டை

 பொறிக்க முடியவில்லை. எனவே தனியான ஒரு பலகைக்கல்லில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு

 கோயிலின் முன் நடப்பட்டுள்ளது.

                             



கல்வெட்டை கண்டறிந்த சூழல்

கி.பி 1995 ஆம் ஆண்டு முதல் எனக்கு வரலாற்றில் ஆர்வம் ஏற்படத்துவங்கியது.அது முதல்

 கல்வெட்டுகளையும், நடுகற்களையும் தேடத்துவங்கினேன். 30 ஆண்டுகளாக விழுப்புரம் பகுதியில்

 கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வுகள் செய்து வரும் திரு விழுப்புரம் வீரராகவன் ஐயாவுடன்

 நட்பு ஏற்பட்டது. அது முதல் ஐயாவுடன் இணைந்து பயணிக்க துவங்கினேன்.

  நாங்கள் ரெட்டாக்குறிச்சி என்ற ஊரில் 7 கல்வெட்டுகளை கண்டறிந்து படி எடுத்து படித்தோம்

. அப்போது அந்த ஊர் மக்கள் அருகே வரஞ்சரம் என்ற ஊரில் ஒரு பழமையான சிவன்கோயில்

 உள்ளது என்ற தகவலை தெரிவித்தனர்.

சில நாட்கள் கழித்து நாங்கள் வரஞ்சிரம் ஊரை நோக்கி பயணித்தோம். அப்போது கோயில்

 மூடியிருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து , அவரிடம் விவரத்தை சொன்னோம். அவர் தான்

 வெளியூர் கிளம்பிக்கொண்டிருக்கிறேன் இன்னொரு நாள் வாங்க என சொன்னார்.

ஒரு பத்துநிமிட அனுமதி பெற்று விரைவாக கோயிலையும்,சிற்பங்களையும் படம் எடுத்துக்கொண்டு

 கள்ளக்குறிச்சி நோக்கி கிளம்பினோம்.

அப்படி செல்லும் வழியில் நாங்கள் பார்த்த சிறிய சிவன் கோயில்தான் இந்த கயிலாசமுடைய

 நாயனார் கோயில்..இக்கோயிலின் முன் ஒரு பலகைக்கல் நடப்பட்டு அதில் எழுத்துக்கள்

 பொறிக்கப்பட்டிருந்தன.

                                 




இதனையும் கடவுளாக கருதிய மக்கள் கல்வெட்டு முழுக்க எண்ணய் தடவி வழிபட்டுள்ளனர்.நீண்ட

 நாட்கள் எண்ணெய் தடவப்பட்டுள்ளதால் எழுத்துக்கள் தெளிவாக தெரியவில்லை. நானும் சாரும்

 கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கல்வெட்டை சுத்தம் செய்தோம்.


அந்த கல்வெட்டு செய்தி உங்களுக்காக

. சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன்,

 ஆறகளூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழு கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம்

 வட்டம் நாகலூர் என்ற ஊரில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது நாகலூர்

 கயிலாயமுடையநாயனார் என்ற சிவன் கோயிலில் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டு ஆய்வு

 செய்யப்பட்டது.

  95 செ.மீ நீளமும், 85 செ.மீ அகலமும்,7 செ.மீ தடிமனும் உள்ள ஒரு பலகைகல்லில் முன்பக்கம் 14

 வரிகள்,பின்பக்கம் 9 வரிகளுடனும் கல்வெட்டு அமைந்துள்ளது. கோயிலின் முன்பக்கம் இது

 நடப்பட்டு உள்ளது.

                               



830 ஆண்டுகளுக்கு முன் மூன்றாம்குலோத்துங்கசோழனின் 13 ஆம் ஆட்சியாண்டில் கி.பி 1191 ஆம்

 ஆண்டு இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் வீரராசேந்திர சோழன் என மூன்றாம்

 குலோத்துங்கன் குறிப்பிடப்பட்டுள்ளார்.கல்வெட்டில் நாவலூர் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.

  12 ஆம்நூற்றாண்டில் சோழநாட்டில் ஜனநாத வளநாட்டு பரனூர் கூற்றத்தில் நாவலூர்

 அமைந்திருந்தது..கூற்றம் என்பது இன்றைய தாலுக்கா போன்றது.
 
  இங்குள்ள கயிலாயமுடைய நாயனார் கோயிலுக்கு துறையுடையான் ஊராடுவான் ஆன

 நந்திபந்மன் என்பவர் ஒரு திருவிழாவை ஏற்படுத்தியுள்ளார். இக்கோயில் பூசைக்கு என ஏற்கனவே

 பத்து மா (ஆயிரம் குழி) நிலம் தானம் செய்யப்பட்டிருந்தது. மேற்கொண்டு ஆயிரம் குழி நிலம்

 ஒதுக்கப்பட்டு மொத்தம் இரண்டாயிரம் குழி நிலம் இத்திருவிழா நடத்த தானமாக தரப்பட்டுள்ளது.

   இந்த திருவிழா தடையில்லாமல் நடத்தும் பொறுப்பை இக்கோயிலில் பூசை செய்து வந்த

 சிவப்பிராமணன் காசிபகோத்திர நீறணிந்தான் காழிப்பிள்ளை மற்றும் அவரது சகோதரர்களிடம்

 ஒப்படைத்து உள்ளனர். இது மட்டுமன்றி இக்கோயிலில் தடையின்றி பூசைகளும் திருவிழாவும்

 நடக்க 4 வேலி (எட்டாயிரம் குழி) புன்செய் நிலமுன் தானமாக தரப்பட்டுள்ளது.

   இவ்வூருக்கு அருகேயுள்ள வரஞ்சிரம் என்ற ஊரில் உள்ள வரஞ்சிரமுடைய நாயனார் என்ற

 கோயிலுக்கு அம்மாவாசை பூசை செய்ய ஏற்கனவே நிலம் தானமாக தரப்பட்டு இருந்தது. அந்த

 நிலத்தில் வரும் விளைச்சலில் இருந்தும்,வரஞ்சிரமுடையநாயனார் கோயிலுக்கு விடப்பட்ட

 நன்செய் நிலத்தில் வரும் விளைச்சலில் இருந்தும் 100 குழிக்கு 16 படி நெல் கயிலாயமுடைய

 நாயனார் கோயில் பூசைக்கும், திருவிழாவுக்கும் தரப்படவேண்டும் என கல்வெட்டு குறிப்பிடுகிறது.

                                   





  ஊரையும், நிலங்களையும், குடிகளையும் பாதுகாக்க பாடிக்காவல் என்ற ஒரு படைப்பிரிவு

 அக்காலத்தில் செயல்பட்டு வந்துள்ளது. அந்தப் படைக்கு அப்பகுதி விளைநிலங்களில் விளையும்

 தானியங்களின் ஒரு பகுதி வரியாக தர வேண்டும். அப்படி வரியாகப்பெற்ற வரகு என்ற தானியமும்

 இந்த திருவிழா செலவுக்காக தரப்பட்டுள்ளது.
 
  இக்கல்வெட்டு அரசனின் நேரடி ஆணையாக வெட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் அப்போது

 வல்லவரையன் என்ற குறுநிலமன்னனின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இந்த தானம் தொடர்ந்து

 நிலைத்து இருக்க வேண்டும் என வல்லவரையன் மீது சத்தியம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில்

 மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம்.


இக்கல்வெட்டின் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்திகள்

1. கற்றளியாக இல்லாமல் செங்கல் தளியாக உள்ள கோயில்களில், அல்லது கற்றளியாக இருந்தும்

 புதிய கல்வெட்டுகளை பொறிக்க இடம் இல்லாத போதும், புதிய கல்வெட்டுகளை பொறிக்க

 வேண்டிய அவசியம் ஏற்படும் போது, ஒரு பலகைக்கல்லில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு

 கோயிலின் உள்ளே ஒரு இடத்தில் நட்டு வைக்கப்பட்டன.

2. மூன்றாம் குலோத்துங்கசோழன் வீரராசேந்திரன் என இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்.

3. தற்போது நாகலூர் என குறிப்பிடப்படும் இந்த ஊர் கல்வெட்டில் நாவலூர் என குறிப்பிடப்படுகிறது.

4. நாகலூர் சோழர் காலத்தில் மிலாடுடைய ஜனநாத வளநாட்டு பரனூர் கூற்றம் என்ற பிரிவில்

 அமைந்திருந்தது.. மிலாடு என்பது திருக்கோயிலூர் பகுதியை குறிப்பதாகும்

5. .இக்கோயிலை கயிலாயமுடைய நாயனார் கோயில் என கல்வெட்டு குறிப்பிடுகிறது.

6. துறையுடையான் நந்திபந்மன் என்பவர் இக்கோயிலுக்கு பூசை செய்ய நிலதானம் அளித்ததையும்

 புதிதாக ஒரு திருவிழாவை ஏற்படுத்தி அதற்க்கும் நிலதானம் செய்ததையும் அறிய முடிகிறது.

7. அக்காலத்தில் நடைமுறையில் இருந்த நில அளவுகளையும் அறிய முடிகிறது. நிலங்கள் மா,

 வேலி என்ற அளவுகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இன்றைய கணக்கில் ஒரு மா என்பது 100 குழி

, ஒரு

 வேலி என்பது 2000(இரண்டாயிரம்) குழி நிலம் ஆகும்.

8. தானியங்களை அளக்க பதக்கு என்ற அளவு முறை அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது

. இன்றய கணக்குப்படி ஒரு பதக்கு என்பது 16 படியை குறிக்கும்.

9. திருவரஞ்சரத்தில் உள்ள வரஞ்சரமுடைய நாயனாருக்கு அம்மாவசையன்று சிறப்பு பூசை

 நடைபெற்றது, அதற்காக தனியாக நிலத்தானமும் செய்யப்பட்டுள்ளது.

10. பாடிக்காவல் என்ற ஒரு காவல்முறை அமைப்பு ஒன்று இருந்ததையும் அதற்கு வரியாக

 தானியங்களையும் மக்கள் செலுத்தியதை அறிய முடிகிறது.

11. கயிலாயமுடைய நாயனார் கோயிலில் பூசை செய்யும் உரிமை காசிபன் நீறணிஞ்சான் ஸ்ரீ

 காழிப்பிள்ளை என்பவரின் குடும்பத்துக்கு உரிமையானதாக இருந்தது.

12. இது அரசரின் நேரிடை ஆணையாக அமைந்துள்ளது.

13. இக்கல்வெட்டு வெட்டப்பட்ட காலத்தில் வல்லவரையன் என்பவர் இப்பகுதிக்கு அதிகாரியாக

 இருந்துள்ளார். இவர் மூன்றாம் குலோத்துங்கனின் கீழ் மகதை நாட்டை ஆண்ட பொன்பரப்பின

 வாணகோவரையனின் கீழ் இப்பகுதியின் பொறுப்பாளராக இருந்திருக்கலாம்.

இக்கல்வெட்டு வெளிவந்த அச்சு மற்றும் இணைய இணைப்புகள்


யூடியூப்

https://www.youtube.com/watch?v=ZdnhBB7eCCc


தினமணி

https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2021/jul/16/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3661568.html


தினகரன்

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=690831


நக்கீரன்

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/discovery-chola-period-inscription-830-years-ago


         


தினமணி நாளிதழ்











கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் வரஞ்சரம் லகுலீசர்                                                           வரஞ்சரம் சிவன் கோயில் 10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம்.வீட்டுக்கு வந்த பின் தான் ஒவ்வொரு படமாக பார்த்தேன். ஒரு படத்தை பார்த்தபோது உடலுக்குள் திடீரென ஒரு உற்சாகம் தொற்றியது. இவர் அவராக

சேலம் வரலாற்று ஆய்வு மையம்-பேளூர் மூக்கறுப்பு கல்வெட்டு

மூக்கறுப்பு போர் நடந்ததிற்கான முதல் கல்வெட்டு ஆதாரம் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 2015 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூருக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு கல்வெட்டுக்கள் ஏதாவது கிடைக்குமா என தேடியபோது அங்காளம்மன் கோயில் முன்புள்ள பாக்குத்தோப்பில் ஓர் கல்வெட்டு இருப்பதாய் சொன்னார்கள். போய் பார்த்த போது அக்கல்வெட்டு பாதி பூமியில் புதைந்திருந்தது. அதை புகைப்படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். அதன் பின் சேலம் வரலாற்று தேடல் குழு என்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது         சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,   கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் அய்யா துணைத்தலைவர்   கலைச்செல்வன் ஆசிரியர், செயலாளர் மருத்துவர் பொன்னம்பலம், இணைச்செயலாளர் பெரியார்மன்னன், பொருளாளர் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் அடங்கிய குழு இக்கல்வெட்டை ஆய்வு செய்து மூக்கறுப்பு போர் நடந்ததற்கான  ஆதாரத்தை கண்டு பிடித்தது .இதைப்பற்றி சன்னல் இதழ் வெளியிட்ட கட்டுரை     கல்வெட்டின் மேல் சிவல

வீரகனூர் புத்தர்

  வீரகனூர் புத்தர் - மகதை மண்டலம் புத்தரின் கையில் காணப்படும் இந்த முக்கோணம் போன்ற குறியீடு நமக்கு சிறப்பான புதிய செய்தி ஏதாவது ஒன்றை சொல்கிறதா ??    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரை தலைநகராக கொண்ட மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்த ஊர் வீரகனூர் அங்கு உள்ள புத்தர் சிலை இது இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்