முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சேலம் வரலாற்று கருத்தரங்கம்

அன்புடையீர் வணக்கம். சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் (Salem Historical Research Center/SHRC) இரண்டாமாண்டு வரலாற்று கருத்தரங்கம் எதிர்வரும் மே மாதம் 13ம் தேதி (13.5.18) ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் (A/C) நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுக் கருத்தரங்கில் அறிஞர் பெருமக்கள் 1.முனைவர் பேராசிரியர் திரு. ராசவேலு ஐயா அவர்கள், ( துறைத்தலைவர், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்) 2.மூத்த கல்வெட்டாய்வாளர் விழுப்புரம் திரு.வீரராகவன் ஐயா அவர்கள் 3.சமண/பவுத்தவியல் ஆய்வாளர் முனைவர்.மகாத்மா செல்வபாண்டியன் அவர்கள் ( Mahathma Selvapandiyan) 4.வரலாறு.காம் ஆசிரியர் குழுவினர் திரு. ச.கமலக்கண்ணன் அவர்கள் மற்றும் 5. திரு.சு.சீதாராமன் அவர்கள் ( Seetharaman Subramanian) ஆகியோர் செறிவான தலைப்புகளில் வரலாற்றுரையாற்ற உள்ளனர். ( தலைப்புகளை அழைப்பிதழில் காண்க) அன்றைய தினம் எமது ஆய்வு மையம் இதுவரை கண்டறிந்த நடுகற்கள் அனைத்தையும் தொகுத்து "சேலம் மாவட்ட நடுகற்கள் (புதிய கண்டறிதல்கள்)...

புத்தூர் நடுகற்கள்

புத்தூர் நடுகற்கள் காலைக்கதிர் தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட 2 நடுகற்கள் பற்றிய செய்தி இன்றைய 3/01/2017 காலைக்கதிர், தினமணி,தினத்தந்தி,தினகரன் நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு காலைக்கதிர் தமிழ்செல்வன்,திரு தினமணி சரவணன்,திரு தினத்தந்தி வேலுமணி, திரு தினகரன் சேகர் ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. தினத்தந்தி தலைவாசல் அருகே 2 நடுகற்கள் கண்டுபிடிப்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே புத்தூர் என்ற கிரா மத்தில் 2 நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளது. இண்டியன் எக்ஸ்பிரஸ் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் புத்தூர் கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது புத்தூர் அரசுப்பள்ளி முன்புறம் உள்ள மரத்தடியில் இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டன . தினகரன் நடுகல் ஆநிரை கவர்தல் அல்லது ஆநிரை மீட்டல், போரில் வீர மரணம் அடைந்தவர்கள், மக்களுக்கு தீங்கு செய்த புலி , பயிர்களை நாசம் ...

ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுகள் எண் 7 காமக்காபாளையம் நானும் வீரராகவன் ஐயாவும் நண்பர்களுடன் கன்னட கல்வெட்டு காமக்காபாளையம் கன்னட கல்வெட்டை பார்த்தபோதே அங்கிருந்த அருணாசலேசுவரர் கோயிலின் சுவற்றில் இருந்த இந்த கல்வெட்டையும் வீரராகவன் ஐயாவும் நானும் படி எடுத்து படித்தோம். பணி சுமையின் காரணமாக கொஞ்ச நாள் முன்புதான் வெளியிட்டோம். காமக்காபாளையத்தை சேர்ந்த நண்பர்  Tvenkatesan Tvenkatesan  எங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்தார். விருதாசலம் கோயிலின் தாக்கத்தால் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கலாம் தலைவாசல் அருகே 527 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே காமக்காபாளையம் என்ற ஊரில் கி.பி. 1490 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் இருவரும் காமக்காபாளையத்தில் உள்ள அருணாசலேசுவரர் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது கோயிலின் அர்த்த மண்டபத்தில் விநாயகர் மாடத்துக்கு மேல் ஒன்பது வரிகளில் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. 98 செ....

ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுக்கள் எண் 6 காமக்காபாளையம் கன்னட கல்வெட்டு நானும் வீரராகவன் ஐயாவும் என் கல்வெட்டு தேடலில் இது ஒரு முக்கியமான கல்வெட்டு. இது வரை தமிழில் மட்டுமே கல்வெட்டுகளை பார்த்த நான் முதன் முதலில் கன்னட மொழியில் கண்டறிந்த கல்வெட்டு இது. நண்பர்கள் சென்ற பதிவில் குறிப்பிட்டதை போல் வேலி முள்ளுக்கு நடுவே தனித்தனியாக இரண்டு கற்கள் கல்வெட்டாய் கன்னட மொழியில் இருந்தது. இதை புகைப்படம் எடுக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். கிட்டவே நெருங்க முடியாத சூழலில் முள் சட்டையை கிழிக்க உடலிலும் கீறி இரத்தம் வர வர போட்டோ எடுத்தேன். ஒரு மாதம் கழித்து நானும் விழுப்புரம் வீரராகவன் அய்யாவும் படி எடுக்க சென்றோம். காமக்காபாளையத்தில் இருக்கும் என் நண்பரும் உறவினருமான  Tvenkatesan Tvenkatesan  அவர்கள் முள்ளை எல்லாம் ஆள் வைத்து வெட்டி சுத்தம் செய்து கொடுத்தார். கல்வெட்டு 2 துண்டாய் உடைந்து நட்டு வைக்கப்பட்டிருந்தது. அதை சுற்றி சப்போட்டுக்கு கற்கள் பதிக்கப்பட்டிருந்து. அன்று கொஞ்சம் கவனகுறைவாக இருந்திருந்தால் எங்க கதை முடிந்திருக்கும். ஒரு கல்லை புரட்டியபோது கல்லுக்குள் இருந்து 10க்கும் மேற்பட்ட ...

Aragalur ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுகள் எண் 5 2 வருடங்களுக்கு முன் ஒரு ஞாயிற்று கிழமை தொல்லியல் தேடலுக்கு கிளம்பினேன். ஆறகழூருக்கு பக்கத்தில் நத்தக்கரைன்னு ஒரு ஊர் அந்த ஊருக்கு போனேன். அந்த ஊருக்கு நத்தகரைன்னு எப்படி பேர் வந்துச்சு...? தெரிஞ்சிக்க அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் பேச்சு கொடுத்தேன்.. அய்யா இந்த ஊருக்கு நத்தகரைன்னு எப்படி பேர் வந்துச்சி..? நத்தக்கரை கல்வெட்டை ஆய்வு செய்யும்போது அதுவா..ரொம்ப வருசத்துக்கு முன்னாடி இங்க ராசாங்களுக்குள் பெரிய சண்டை நடந்திச்சி. அப்ப நெறைய பேரு இங்க போரில செத்து போய் ரெத்தம் ஆறா ஓடிச்சாம்.அதனால ரத்தகரைன்னு பேரு வந்துச்சாம். காலபோக்குல ரத்தகரை மருவி நத்தகரைன்னு ஆயிடுச்சி . இந்த சண்டையில கை,காலு போனவங்க, காயம் பட்டவங்களுக்கு மலைக்கு பக்கத்துல நிலம் கொடுத்து அங்கியே தங்க வச்சாங்க. அந்த ஊருதான் இப்ப இருக்குற புத்தூர்.என சொல்லி முடித்தார். இன்னொரு பெரியவரிடம் கேட்டேன். அவர் அந்த காலத்தில் இது ஆறகழூரின் ஒரு பகுதியாதான் இருந்துச்சி..ஆறகழூர் தலைநகராக இருந்திச்சி..கோட்டைக்குள்ள ராசா மந்திரி அப்புறம் முக்கியமான ஆளுங்க குடியிருப்பாங்க..சாதாரண ஆட்கள் குடியி...

ஆறகழூர் கல்வெட்டுகள் பெரியேரி

பெரியேரி எலி கல்வெட்டு முன்புறம் பெரியேரி எலிகல்வெட்டு பின்புறம் மைப்படி எலி தமிழ் இந்து நாளிதழ் செய்தி ஆறகழூர் கல்வெட்டுகள் எண் 4 பெரியேரி எலிக்கல்வெட்டு அண்ணே இந்த மருந்தை கொடுங்க.. இந்த மாத்திரை 3 வேளைக்கு சாப்பிட்ட அப்புறம் கொடுங்க.. சீக்கிரம் நல்லாயிடுமா.. டாக்டர் செக் பண்ணிதானே எழுதியிருக்கார். சாப்பிடுங்க சரியாயிடும். அப்புறம் உகளுக்கு தெரிஞ்சி எங்கியாவது கல்வெட்டு இருக்கா..? கல்வெட்டா...? நம்ம பெரியேரி வண்ணான் குளம் பக்கத்துல ஒரு கல்லுல எழுதியிருக்கு வேணா போய் பாருங்க... அது எவ்வளவு முக்கியமான கல்வெட்டுன்னு அப்ப எனக்கு தெரியல. இது வரை நான் பார்த்த கல்வெட்டுலே பெரிய கல்வெட்டு அதுதான்.இது எதுவுமே தெரியாம பெரியேரி கிளம்பி போனேன். வண்ணான் குளம் அருகே தேடினேன். கல்வெட்டு கிடைக்கல..கொஞ்சம் உள்ள போய் தேடலாமான்னு யோசிட்டு உள்ள போனேன். நமக்கு தெரிந்தவர் காடுதான் அது அண்ணே இங்க கல்வெட்டு ஒண்ணு இருக்குன்னு சொன்னாங்களே அது எங்க இருக்கு.. அதுவா...பல தலை முறையா அது இங்கதான் இருக்குன்னு கூட்டிகிட்டு போனார். இந்த கல்லுக்கு அடியில் புதையல் இருக்குமுன்னு...