முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏற்காடு மாரமங்கலம் புதிய கற்கால கருவிகள் காட்டுபன்றி குத்தி பட்டான் நடுகல்

ஏற்காடு மாரமங்கலம் காட்டுபன்றிகுத்திபட்டான் நடுகல் மற்றும் புதிய கற்கால கருவிகள் கடந்த சனிக்கிழமை அன்று 29 ஜூலை  2017 அன்று கலைச்செல்வன் ஆசிரியர் மற்றும் பெருமாள் ஆசிரியர் இருவரும் ஏற்காடு பகுதியில் தேடலை மேற்கொண்டனர் .மோசமான சாலையிலும் கடுமையாக முயற்சித்து கல்வெட்டுக்களையும் ,ஒரு பன்றிகுத்தி பட்டான் நடுகல்லையும் கண்டறிந்தனர். அடுத்த நாள் ஞாயிற்று கிழமை நம் சேலம் வரலாற்று ஆய்வு மைய குழுவானது விழுப்புரம் வீரராகவன் அய்யாவை அழைத்துக்கொண்டு ஏற்காடு கிளம்பியது.  80% நல்ல சாலை 20% செங்குத்தான மிகச்சரிவான மண்சாலையில் பயணித்தோம். 13 ஆம் நூற்றாண்டு கோயிலில் 4 கல்வெட்டுக்கள் படி எடுத்தோம். கல்வெட்டுடன் கூடிய காட்டுபன்றி குத்தி பட்டான் கல்லில் உள்ள எழுத்துக்களையும் படித்தறிந்தோம். Kalai SelvanKaliyappan SrinivasanPerumal Madhu NavinPonnambalam ChidambaramJeevanarayanan SelvakumarPeriyar MannanOotykrishna ஆகிய சேலம் வரலாற்று ஆய்வு மைய உறுப்பினர்கள் பங்கு கொண்டனர். காட்டுப்பன்றி குத்தி பட்டான் கல், மற்றும் புதிய கற்கால கருவிகள் பற்றிய செய்தி இன்றைய தினமணி, காலைக்கதிர்,தினகரன் செய்திதாட...

சேலம் வாழப்பாடி பெரியகுட்டி மடுவு நடுகற்கள்

பெரியகுட்டி மடுவு -11ஆம் நூற்றாண்டு சோழர்கால நடுகல் செய்தி. சுமார் 3 மாதங்களுக்கு முன் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பெருமாள் சார் புழுதிக்குட்டை பகுதிக்கு ஆய்வு செய்யலாம் என அழைத்தார். சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த விழுப்புரம் வீரராகவன் அய்யா,ஆறகழூர் பொன்.வெங்கடேசன், சுகவன முருகன் சார் பெருமாள் சார், கலைச்செல்வன் ஆசிரியர், மருத்துவர் பொன்னம்பலம்,சீனிவாசன், ஜீவநாராயணன், பெரியார் மன்னன், தீபக் ஆதி, வீரமணி வீராசாமி அய்யா ஆகியோர் அடங்கிய குழு புழுதிக்குட்டை பகுதியில் இரண்டு நடுகற்களை ஆய்வு செய்து படி எடுத்தோம்.. மேற்கொண்டு தேடலை தொடர கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் இங்கு நடுகல் இருக்கா, கல்வெட்டு இருக்கா என விசாரித்துக்கொண்டே மலை மேல் பைக்கில் ஏறுக்கொண்டே இருந்தோம். நீண்ட விசாரிப்பகளுக்கு பின் பெரிய குட்டி மடுவு என்ற இடத்தில் 2 கல்லு ரொம்ப நாளா நின்னுகிட்டு இருக்கு என தகவல் சொன்னார்..உற்சாகம் பீறிட அந்த இடத்தை நோக்கி எங்களின் பைக் சீறி பாய்ந்து சென்றது.. கிட்ட தட்ட அந்தி சாயும் நேரம் .சூரியன் மெல்ல மறைய துவங்கியிருந்தான் .இருட்டுவதற்க்குள் போகவேண்டுமே என பரபரப்புட...

thiyakanur inscription - தியாகனூர் கல்வெட்டுக்கள்

தலைவாசல் அருகே 5 புதிய கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு தியாகனூர் கல்வெட்டுக்கள் தினமலர் செய்தி காலைக்கதிர் செய்தி தியாகனூர் கல்வெட்டு காலைக்கதிர் செய்தி தியாகனூர் கல்வெட்டு தினமலர் செய்தி சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்.மருத்துவர் பொன்னம்பலம்,கலைச்செல்வன்,பெருமாள்,சீனிவாசன்,ஜீவநாராயணன்,பெரியார் மன்னன் ஆகியோர் அடங்கிய குழு சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தியாகனூரில் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அங்குள்ள மலை மண்டல பெருமாள் கோயிலில் 5 புதிய கல்வெட்டுக்களை கண்டுபிடித்தனர். இவை 13 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தை சேர்ந்ததாகும் 13 ஆம் நூற்றாண்டில் ஆறகழூரின் ஒரு பகுதியாகவே தியாகனூர் இருந்துள்ளது. 15 ஆம் நூற்றாண்டுக்கு பின்னரே தியாகனூர் என பெயர் பெற்றது. இங்குள்ள கல்வெட்டுக்கள் இக்கோயிலை ஆறகழூர் மலைமண்டல பெருமாள் கோயில் என்றே குறிப்பிடுகின்றன. 12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூரை தலை நகராக கொண்டு வாணகோவரையர்கள் மகதை மண்டலத்தை ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் காலத்தில் செய்யப்பட்ட ...

சேலம் மாவட்ட கோட்டைகள்

                                  சேலம் மாவட்ட கோட்டைகள்     சேலம் மாவட்ட கோட்டைகள் வரலாற்றில் சேலம் மாவட்டம் எப்போதுமே முக்கிய பங்கு வகித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் பல கோட்டைகள் இருந்திருந்தாலும் இன்றைய நிலையில் சில கோட்டைகளே பார்க்க கூடிய நிலையில் உள்ளன அவை... 1. ஆத்தூர் கோட்டை 2. சங்ககிரி கோட்டை 3. நாமக்கல் கோட்டை(பழைய சேலம் மாவட்டம்) கால வெள்ளத்தில் காணாமல் போன கோட்டைகள் 4. ஓமலூர் கோட்டை 5. சேலம் கோட்டை 6. நங்கவல்லி கோட்டை 7. சேந்தமங்கலம் கோட்டை 8. பரமத்தி கோட்டை 9. பேளூர் கோட்டை 10. பெத்தநாயக்கன் பாளையம் கோட்டை 11. ஆறகழூர் கோட்டை 12. மேச்சேரிக்கோட்டை 13. அமரகுந்தி கோட்டை 14. தம்மம்பட்டி கோட்டை... ஆத்தூர் கோட்டை நாமக்கல் கோட்டை சங்ககிரி கோட்டை இது தவிர சேலம் மாவட்டத்தில் உங்களுக்கு தெரிஞ்ச கோட்டை இருந்தா சொல்லுங்க நண்பர்களே...

ஆறகழூர் கோட்டை

ஆறகழூர் கோட்டை ஆறகழூரில் கோட்டை இருந்ததற்கான தடயங்கள் வெளிப்படையாய் இப்போது இல்லை. கோட்டைக்கரை என்ற பெயர் மட்டுமே இங்கு கோட்டை இருந்ததற்கான ஆதாரமாய் உள்ளது.கி.பி.12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூர் மகதை மண்டலத்தின் தலைநகராக இருந்துள்ளது. தலைநகர் என்பதால் நிச்சயம் கோட்டை இருந்திருக்க வேண்டும். கோட்டைக்கரையில் வீடு கட்ட கடைக்கால் எடுக்கும் போது கல்தூண்கள் , அலங்கார வளைவு கற்கள் கிடைத்துள்ளன. எனவே கோட்டைக்கரை, மற்றும் அரசு பள்ளி இருக்கும் இடம் கோட்டை பகுதியாக இருந்திருக்க வாய்ப்புண்டு. . கோட்டையை சுற்றி பாதுகாப்புக்காக அகழிகள் இருந்துள்ளது ஆறு+அகழ்+ஊர்= ஆறகழூர் என்றும் ஆறே அகழியாக அமைந்ததால் ஆறகழூர் என பெயர் பெற்றது என்ற கருத்துக்கள் உண்டு 17 ஆம் நூற்றாண்டில் வேணுவராயன் என்ற சிற்றரசன் கோட்டை கட்டிக்கொண்டு அரசாண்டதாக லெபான் குறிப்பிடுகிறார். திப்புசுல்தான் இங்கு வரும்போது கல்வராயன் மலைப்பகுதிக்கு ஓடிவிட்டான் என்று சொல்லப்படும் செய்தியால் வேணுவராயன் காலம் திப்புசுல்தான் இறந்த 18 ஆம் நூற்றாண்டாகலாம்..ஆறகழூர் திருகாமீசுரமுடைய நாயனார் கோயிலின் தென்புற சுவரின் அருகே உள்ள பகுதி துலுக்கண் தோட்டம...

ஆறகழூர் பின்னமான சிற்பங்கள்

செல்வன் சிறுதொண்டன் ? பின்னமானதால் ஆறகழூர் காமநாதீசுவரர் கோவிலில் வெளியேற்றப்பட்ட சிற்பங்கள் .இதில் 12ஆம் நூற்றாண்டி p ல் அப்பர்,சுந்தரர், திருநாவுக்கரசர், இந்த மூவருக்கும் செப்பு சிலைகள் செய்து வழிபாட்டுக்கு 15,000 பொற்காசுகள் அந்த காலத்திலேயே. கொடுத்த சிவத்தொண்டனும் இருப்பதுதான் வேதனை....              

பெரியேரி சூலகற்கள்

                      பெரியேரி சூலகற்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெரியேரி சூலகற்கள். இதுவரை அறியப்பட்டவை 2. அதில் ஒன்று படிக்கப்பட்டுவிட்டது. ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டுக்களில் பல நிலதானங்கள் பற்றிய செய்தி இருக்கு..அதில் ஒரு கல்வெட்டில் காமநாதீஸ்வரனுக்கு இறையிலியாக பெரியேரி ஏரியின் கீழ் நந்தவனம் அமைப்பதற்காக 1000 குழி நிலம் விடப்பட்டு சூலக்கல் நட்டு எல்லை வரையறுக்கப்பட்டுல்ளதாய் உள்ளது...சில மாதங்களுக்கு முன் அதை கண்டுபிடித்தேன்... நான்கு திசையிலும் கல் நட்டு எல்லை வரையறுக்கப்பட்டதாய் கல்வெட்டில் இருக்கு..அப்ப மத்த 3 திசையிலும் உள்ள கல் எங்கே...? மீண்டும் ஒரு ரவுண்டு சுற்றினேன்...ஏரிக்கு கிழக்குப்பகுதியில் ஒரு சோளக்காட்டுக்கு நடுவே வரப்பின் மேல் ஒர் சூலக்கல் இருந்தது... பாதி வரை மண்ணுக்கு அடியில் உள்ளது...முடிந்த வரை மண்ணை அகற்றிவிட்டு படம் எடுத்தேன்..ஆனா இதில் என்ன எழுதியிருக்குன்னுதான் தெரியல...??!!!! இந்த கல்லை குறிப்பிட்ட ஒரு நாளில் பெரியேரி ஆதி திராவிட மக்கள் வந்து வணங்குகிறார்கள்..அது எதுக்கா இர...